பதிவு செய்த நாள்
29 அக்2017
04:32
இணைய வர்த்தகத்தில் கலக்கும், அமெரிக்காவின், ‘அமேசான்’ நிறுவனம், நாட்டில், கணிசமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிறுவனம், அமெரிக்காவில், தானியங்கி சிறிய விமானங்களான, ‘ட்ரோன்’ மூலம், சில இடங்களில், ‘டெலிவரி’ செய்ய துவங்கி உள்ளது. இந்தியாவிலும், அதற்காக உரிமம் கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.இந்நிலையில், ‘எலக்ட்ரிக்’ எனப்படும், ‘பேட்டரி’ கார்களுக்கு, ‘சார்ஜ்’ செய்ய, ட்ரோன்களை பயன்படுத்த, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு காரை, அமேசானின், கணினி, ‘சர்வரில்’ இணைத்துவிட்டால், அந்த காரின், சார்ஜ் குறையும் நிலை எட்டியதும், சாலையில் கார் போய்க் கொண்டிருக்கும் போதே, அதன் மேல் பறந்தபடி, எந்தவொரு தொடர்புமின்றி, பேட்டரியை, தானாகவே, ‘ரீசார்ஜ் ’ செய்யுமாம். இதற்கான காப்புரிமை பெற, அமெரிக்க அரசிடம், அமேசான் விண்ணப்பித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|