பதிவு செய்த நாள்
29 அக்2017
04:33
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இருசக்கர வாகன விற்பனையை கூட்டுவதற்காக, அதன், ‘வி’ வரிசை பைக்குகளில், புதிய உறுப்பினரை, விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.அது தற்போது, அதிக திறன்மிக்க இன்ஜின் உள்ள, ‘வி’ பைக்குகளைத் தான் விற்பனை செய்கிறது. ‘வி’ பைக்குகளுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால், அவ்வரிசையில், குறைந்த இன்ஜின் திறனுடைய, ‘பிளாட்டினா; சிடி 100’ போன்ற, 100 ‘சிசி’ இன்ஜினுடன் கூடிய பைக்கை களமிறக்க உள்ளது.இது போல், பஜாஜின், ‘க்ரூசர்’ ரக பைக்கான, ‘அவெஞ்சர்’ ஒரு மூத்த சகோதரனை பெற உள்ளது. தற்போது, 220 ‘சிசி’ இன்ஜின் திறனுடைய, ‘அவெஞ்சர்’ பைக்குகள் விற்பனையாகி வரும் நிலையில், புதிய, 400 ‘சிசி’ பைக், விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.அது, ‘ராயல் என்பீல்டு, தண்டர்பேர்டு’ பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும். இந்த இரு பைக்குகளும், 2018 மார்ச்சில், சந்தைக்கு வரக்கூடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|