ஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பனையில் புதிய சாதனைஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வேலை மாறும் முன்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2017
00:58

வேக­மாக மாறி வரும் உலகில், பணி­யிட சூழ­லிலும் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. பணி நிரந்­தரம் என்­பது முன்­போல வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­ப­தோடு, பலரும் பல ஆண்­டுகள் ஒரே நிறு­வ­னத்தில் இருக்க விரும்­பு­வ­தில்லை. அதிலும், குறிப்­பாக மில்­லி­னியல் என குறிப்­பி­டப்­படும், புத்­தா­யி­ர­மாண்டின் தலை­மு­றை­யினர் முன்­னேற்­றத்தை விரும்பி, வேறு வேலைக்கு மாறும் தன்மை கொண்­டுள்­ளனர். எனினும், வேலை மாறும் போது கவ­னத்தில் கொள்ள வேண்­டிய முக்­கிய விஷ­யங்­களும் இருக்­கின்­றன.

சம்­பள நுணுக்­கங்கள்:
புதிய வேலையை தேர்வு செய்யும் போது அனை­வரும், சம்­பளம் அதி­கமா என்­பதை உறுதி செய்து கொள்ளத் தவ­று­வ­தில்லை. ஆனால், சம்­ப­ளத்தின் மற்ற அம்­சங்­க­ளையும் கவ­னிக்க தவ­றக்­கூ­டாது. ஒட்­டு­மொத்த சம்­பள அம்­சங்­களும் சாத­க­மாக இருக்­கி­றதா என, பார்க்க வேண்டும். உதா­ர­ணத்­திற்கு, பழைய வேலையை விட, புதிய வேலையில் ஊதியம் அதிகம் என்­றாலும், அடிப்­படை சம்­பளம் எப்­படி இருக்­கி­றது; வரிக்கு பின், கைக்கு எவ்­வ­ளவு வரும் என்­பது போன்ற அம்­சங்­களை கவ­னிக்க வேண்டும்.

வாழ்­வியல் மாற்றம்:
வேலை மாறு­வது என முடிவு செய்­து­விட்டால், வாழ்­வியல் முறையை ஆய்வு செய்து, அதில் மாற்றம் தேவையா என்றும் பரி­சீ­லித்துப் பார்க்க வேண்டும். சில நேரங்­களில் புதிய வாய்ப்­பிற்­காக, குறை­வான சம்­பளம் கொண்ட வேலையை கூட தேர்வு செய்­யலாம். எனில், அதற்­கேற்ப வாழ்க்கைத் தேவை­களை குறைத்துக் கொண்டு, பட்­ஜெட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அதே போல, பழைய வேலையில் இருந்து விலகும் போது, ஈடு தொகை அதிகம் கிடைத்தால் அதை ஆடம்­ப­ர­மாக செல­வி­டாமல் இருக்­கவும் சரி­யாக திட்­ட­மிட வேண்டும்.

நிதி இலக்கு என்ன?
செல­வு­களை பரி­சீ­லிப்­பது போலவே சேமிப்­பையும் பரி­சீ­லிக்க மறக்கக் கூடாது. புதிய வேலைக்கு மாறு­வது, ஒரு­வரின் நிதி இலக்­கு­களின் மீது எந்த வகை தாக்கம் செலுத்தும் என பார்க்க வேண்டும். வரு­மா­னத்தில் ஏற்­படும் மாற்­றத்­திற்கு ஏற்ப சேமிப்பு அள­வையும் மாற்றி, முத­லீடு உத்­தி­க­ளையும் வகுப்­பது பொருத்­த­மாக இருக்கும். அதிக சம்­பளம் கிடைக்கும் எனில், அதற்­கேற்ப நிதி இலக்­கு­களை பரி­சீ­லித்து செயல்­பட வேண்டும்.

பி.எப்., கணக்கு மாற்றம்:
வேலை மாற்றம் என்­பது ஊதியம் அல்­லது பதவி உயர்வு தொடர்­பு­டை­யது மட்டும் அல்ல; பி.எப்., போன்ற அம்­சங்­க­ளையும் கவ­னிக்க வேண்டும். முந்­தைய நிறு­வ­னத்தில், பி.எப்., கணக்கு இருந்தால், புதிய நிறு­வ­னத்­திற்கு அதை மாற்­றிக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பி.எப்., கணக்கை மாற்றிக் கொள்­வ­தற்­கான நடை­முறை இப்­போது எளி­தாக்­கப்­பட்­டுள்­ளது. பி.எப்., என்­பது ஓய்வு காலத்தில் கைகொ­டுக்கும் முத­லீடு என்­பதால், இதில் சுணக்கம் காட்­டக்­கூ­டாது.

காப்­பீடு:
பணி மாற்­றத்­திற்கு ஏற்ப காப்­பீடு பாது­காப்பு போது­மா­ன­தாக இருக்­கி­றதா என்றும் பரி­சீ­லிப்­பது அவ­சியம். பழைய நிறு­வ­னத்தில் மருத்­துவ காப்­பீடு வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம்; குழு காப்­பீடு வச­தியும் இருந்­தி­ருக்­கலாம். பணி மாறு­வதால் இவற்றின் மீதான தாக்கம் என்ன என்­பதை அறிந்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். புதிய சூழ­லுக்கு ஏற்ப போதிய காப்­பீடு இருக்­கி­றதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)