ஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பனையில் புதிய சாதனைஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் நாம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2017
01:09

ஆதார் எண்­ணோடு மொபைல்­போன் எண்ணை, வங்­கிக் கணக்கை இணைக்­க­வேண்­டும் என்று மத்­திய அரசுதெரி­விக்­கும்­போது, கடு­மை­யான அதி­ருப்தி. ஆதார் அடை­யாள அட்­டை­யால் கிடைக்­கக்­கூ­டிய பலன்­க­ளை­விட, தனி­யு­ரி­மைக்­குப் பெரிய பாதிப்பு என்று நீதி­மன்­றம் சென்­ற­வர்­கள் உண்டு. தனி­ம­னி­தர்­களை அரசு வேவு பார்க்­கி­றதா என்ற கேள்வி வேறு!

சீனா­வில் நடை­பெற்­று­வ­ரும் ஒரு முயற்­சியை நம் முயற்­சி­யோடு ஒப்­பிட்­டுப் பார்த்­தால், நாம் எவ்­வ­ளவு பெரிய ஜன­நா­ய­க­வா­தி­கள் என்­பது புரி­யும். சீனாவை ஆட்சி செய்­து­வ­ரும் மத்­திய குழு, ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. சீனா­வில் உள்ள ஒவ்­வொரு மனி­த­ரை­யும் கணிக்­கும், ‘சமூக மதிப்பு அள­வீட்டு எண்’ என்­பதை உரு­வாக்­கு­வதே, அந்த அறிக்­கை­யின் அடிப்­படை. அதா­வது, நம் நாட்­டில், வங்­கி­களில் கடன் பெற, நம் கடன் பெறும் திறனை அள­வீடு செய்ய, ‘கிரெ­டிட் ரேட்­டிங் ஸ்கோர்’ என்று ஒன்று உண்டு. நீங்­கள் ஒவ்­வொரு மாத­மும் சரி­யான தேதி­யில், வீட்­டுக் கடன், வாக­னக் கடன், கல்­விக் கடன் தொகை­க­ளைச் செலுத்­து­கி­றீர்­களா என்­பதை அள­வீடு செய்து, உங்­க­ளுக்கு ஓர் ஸ்கோர் வழங்­கப்­படும். அதிக புள்ளி இருப்­ப­வர்­க­ளுக்கு குறைந்த வட்­டி­யில் கூடு­தல் கடன் கிடைக்­கும் என்­பதே இதன் அர்த்­தம்.

ஏன் இந்த அளவீடு:
இதன் தொடர்ச்சி தான், சீனா­வின் சமூக மதிப்பு அள­வீட்டு எண். இப்­போ­தைக்கு இந்த அள­வீட்டு எண்ணை சீன மக்­கள் விருப்­பத்­தின் பேரில் பெற்­றுக்­கொள்­ள­லாம். 2020 முதல் இது கட்­டா­யம்.ஏன் இந்த அள­வீடு? மக்­க­ளு­டைய நம்­ப­கத்­தன்மையை கணித்து, தேசிய அள­வில் அதை உயர்த்­து­வ­தோடு, நேர்மையையும் வலு­வ­டை­யச் செய்ய வேண்­டு­மாம். 1.3 பில்­லி­யன் மக்­கள்­தொகை உள்ள நாட்­டில் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் நேர்­மை­யை­யும் எப்­படி உயர்த்­து­வது?அவர்­க­ளு­டைய பழக்க வழக்­கங்­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தன் மூலம், வர்த்­தக, நிதி பரி­மாற்­றங்­களை அள­வி­டு­வ­தன் மூலம், அவர்­க­ளு­டைய சமூக வலை­தள பங்­க­ளிப்­பு­களை கணிப்­ப­தன் மூலம், சமூக மதிப்பு அள­வீடு நடை­பெற இருக்­கிறது.

சீன அரசு, எட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, மக்­களின் நட­வ­டிக்­கை­களை கணித்து வழங்­கு­வ­தற்­கான லைசென்சை வழங்­கி­யுள்­ளது. இதில் முக்­கி­ய­மா­னது இணைய வர்த்­தக நிறு­வ­ன­மான அலி­பா­பா­வின் துணை நிறு­வ­ன­மான செஸ்மே கிரே­டிட் என்­பது. மக்­க­ளு­டைய செயல்­பா­டு­கள் தனித்­த­னியே மதிப்­பி­டப்­பட்டு, 350 முதல், 900 புள்­ளி­கள் வரை வழங்­கப்­ப­டு­கின்றன. அவர்­க­ளு­டைய நட­வ­டிக்­கை­கள் ஐந்து பிரி­வு­களின் கீழ் அள­வி­டப்­ப­டு­கின்றன. முத­லில், கட்­ட­ணங்­கள், கடன்­கள் உரிய தேதி­யில் செலுத்­து­கி­றாரா? இரண்டு, அவ­ரால் சொன்ன தேதி­யில் கடன்­க­ளைச் செலுத்­தும் சக்தி இருக்­கி­றதா? மூன்று, அவ­ரது தனிப்­பட்ட விபரங்­க­ளான தொலை­பேசி எண்­கள், முக­வரி, மின்­னஞ்­சல் ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்­து­தல். நான்­கா­வ­தில் இருந்­து­ தான், மக்­களின் மனோ­பா­வங்­கள் அறி­யப்­ப­டு­கின்றன.

ஷாப்பிங் பழக்கம்:
குறிப்­பாக ஷாப்­பிங் பழக்­க­வ­ழக்­கங்­கள் என்ன? அவர்­கள் வாங்­கும் பொருட்­க­ளி­லி­ருந்து குணா­தி­ச­யம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­வ­தாக செஸ்மே கிரெ­டிட் ஒப்­புக்­கொண்­டுள்­ளது.‘ஒரு­வர் 10 மணி­நே­ரம் வீடியோ கேம் விளை­யா­டி­னால், அவர் வேலை­வெட்டி இல்­லா­த­வர். தொடர்ச்­சி­யாக குழந்­தை­க­ளுக்­கான டையப்­பர் வாங்­கி­னால், அவர் பொறுப்­புள்ள ஓர் அப்பா!’ஐந்­தா­வது, சக­ ம­னி­தர்­க­ளு­ட­னான உறவு. அவ­ரது ஆன்­லைன் நண்­பர்­கள் யார்? அவர்­கள் என்­ன­வெல்­லாம் பேசு­கி­ன்றனர், எழு­து­கி­ன்றனர்? அதற்கு இவர் எப்­படி பதில் அளிக்­கி­றார்? அரசை எதிர்த்து எழு­து­கி­றாரா? ஆத­ரிக்­கி­றாரா? இவற்­றைக் கண்­கா­ணித்து, ஒவ்­வொன்­றுக்­கும் தனித்­த­னியே புள்­ளி­கள் வழங்­கப்­ப­டு­கின்றன. இதெல்­லாம் எப்­படி நடை­பெ­று­கிறது? மக்­க­ளு­டைய ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­­யும் இணை­யத்­தில் பதி­வா­கிக்­கொண்டே இருக்­கின்றன.

சுற்றுலா விசா:
அவை அனைத்­தும் தொகுக்­கப்­பட்டு, ஒரு தனி­ந­ப­ரின் லட்­ச­ணங்­கள் அத்­த­னை­யை­யும் பிட்­டுப் பிட்டு வைக்­கி­ன்றனர் பிக் டேட்டா ஆய்­வா­ளர்­கள். இவர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் உங்­க­ளால் ஒரு ஊசி­யையோ, பென்­சி­லையோ கூட வாங்க முடி­யாது, விற்க முடி­யாது. பிரச்னை இங்­கே­யி­ருந்து­தான் ஆரம்­பிக்­கிறது. அதிக புள்­ளி­கள் இருந்­தால் என்ன பயன்? இல்­லா­விட்­டால் என்ன நஷ்­டம்? 600 புள்­ளி­க­ளைத் தொட்­டால், இணை­யத்­தில் பொருள்­கள் வாங்க 5,000 யுவான் (சீன நாண­யம்) கடன் கிடைக்­கும். 650ஐ தொட்­டால், டெபா­சிட் கட்­டா­மல், கார் ஒன்றை வாட­கைக்கு எடுத்­துக்­கொள்ள முடி­யும். ஓட்­டல்­களில் விரை­வாக செக்-இன் செய்ய முடி­யும், பீஜிங் சர்­வ­தேச விமான நிலை­யத்­தில் வி.ஐ.பி., செக்-இன் வசதி கிடைக்­கும்.

666 புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்­று­விட்­டாலோ, 50 ஆயிரம் யுவான் ரொக்க கடனே கிடைக்­கும். 700 புள்­ளி­க­ளுக்கு மேல் என்­றாலோ, எந்­த­வி­த­மான ஆவ­ண­மும் இல்­லா­மல் சிங்­கப்­பூர் சுற்­றுலா செல்­ல­லாம். 750 புள்­ளி­கள் என்­றால், மதிப்­பு­மி­குந்த ஐரோப்­பிய சுற்­றுலா செல்­வ­தற்­கான விசா பெறு­வ­தில் முன்­னு­ரிமை கிடைக்­கும். அதி­க புள்­ளி­கள் பெற்­றி­ருப்­ப­வர்­களே அங்கே சூப்­பர்ஸ்டார்­கள். ஏற்கனவே ஒரு லட்­சம் பேர் தாங்­கள் பெற்­றி­ருக்­கும் அதி­க­மான புள்­ளி­க­ளைக் காட்டி பீற்­றிக் ­கொள்­கி­ன்றனர். இவர்­க­ளுக்­குத்­தான் திரு­ம­ணத்­துக்­கான பெண்­கள் உட­ன­டி­யாக கிடைக்­கி­ன்றனர்.

தடை:
புள்­ளி­கள் குறைந்­து­போ­னால் என்­னா­கும்? அவர்­கள் அர­சுக்கு நம்­ப­க­மா­ன­வர்­கள் இல்லை, நேர்­மை­யா­ன­வர்­கள் இல்லை. அத­னால், இணைய ஸ்பீடு குறைந்­து­போ­கும். ஓட்­ட­லில் தங்­கும் அறை சுல­பத்­தில் முடி­யாது. வாட­கைக்கு இடம் கிடைக்­காது. காப்­பீட்­டையோ, கட­னையோ பெற திண்­டாட வேண்­டும். ஒரு­சில இடங்­களில் வேலை கூட கொடுக்­க­மாட்­டார்­கள். தனி­யார் பள்­ளி­களில் பிள்­ளை­க­ளுக்கு இடம் கிடைக்­காது. ரயில் முன்­ப­திவு கிடைக்­காது. வாடகை கார் கூட கிடைக்­காது. அதா­வது, அவர்­கள் இரண்­டாம் தர, மூன்­றாம் தர குடி­மக்­கள்.ஏற்­க­னவே, சரி­யான முறை­யில் நடந்­து­கொள்­ள­வில்லை என்ற கார­ணத்­தைக் காட்டி, 61.5 லட்­சம் பேருக்கு கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக விமா­னப்பய­ணம் மறுக்­கப்­பட்­ட­தாக, சீனா­வின் உச்ச நீதி­மன்­றம்தெரி­வித்­தது. அதே­போல், 16.5 லட்­சம் பேர் ரயில்­களில் பய­ணம் செய்­ய­வும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

மக்­களின் அனு­மதி இல்­லா­ம­லேயே உல­கின் பல முன்­னே­றிய நாடு­களில், ‘பிக் டேட்­டாவை’க் கொண்டு மக்­கள் வேவு பார்க்­கப்­ப­டு­கின்­ற­னர். அங்கே சுதந்­தி­ரம் வேண்­டாம், ‘கீழ்­ப­டி­தல்’ மட்­டுமே வேண்­டும். இந்­தப் பின்­ன­ணி­யில், நம் நாட்டை யோசித்­துப் பாருங்­கள். மக்­கள்­சக்தி, ஜன­நா­ய­கத்­தில் நாம் வைத்­தி­ருக்­கும் மதிப்பு புரி­யும்.
– ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)