பதிவு செய்த நாள்
05 நவ2017
06:32
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஐந்து கியர் உடைய, ஏ.எம்.டி., கார் அறிமுகமாகி உள்ளது. ‘கிளட்ச்’ மற்றும், ‘கியரை’ வேகத்திற்கு தக்கவாறு, தானாக மாற்றிக் கொள்ளும், ஏ.எம்.டி., ரக காரான இதில், எக்ஸ்.இசட்.ஏ., மற்றும் எக்ஸ்.டி.ஏ., ஆகிய மாடல்களை, டாடா அறிமுகம் செய்துள்ளது. முதலாவது மாடலின் டில்லி ஷோரூம் துவக்க விலை, 5.75 லட்சம் ரூபாய். இரண்டாவதன் விலை, 6.22 லட்சம் ரூபாய்.எக்ஸ்.டி.ஏ.,வில், 14 அங்குல, ஸ்டீல் வீல்; 4 ஸ்பீக்கருடன் கூடிய, இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் பார்கிங் சென்சர்ஸ், ஸ்மார்ட் போனுக்கான, ‘புளூ டூத் கனெக்டிவிட்டி’ போன்ற அம்சங்கள் உள்ளன. எக்ஸ்.இசட்.ஏ.,வில், 4 ஸ்பீக்கர் மற்றும் இரு, ‘ட்வீட்டர்’கள் உடைய, கனெக்ட்நெக்ஸ், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 15 அங்குல அகல, ‘அலாய் வீல்’ ஆகியவை சிறப்பம்சங்கள். 85 எச்.பி., திறனுடைய, 1.2 லிட்டர் பெட்ரோல், ‘ரெவோட்ரான்’ இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|