பதிவு செய்த நாள்
10 நவ2017
23:52
புதுடில்லி : இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான – ‘சியாம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, அக்டோபரில், 2.80 லட்சமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2.81 லட்சமாக இருந்தது. இதே காலத்தில், கார் விற்பனை, 5.32 சதவீதம் குறைந்து, 1.95 லட்சத்திலிருந்து, 1.85 லட்சமாக சரிவடைந்து உள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனை, 3.50 சதவீதம் குறைந்து, 11.04 லட்சமாக உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், மொத்த இருசக்கர வாகன விற்பனை, 2.76 சதவீதம் குறைந்து, 17.51 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 18.01 லட்சமாக இருந்தது. அதே சமயம், வர்த்தக வாகன விற்பனை, அக்டோபரில், 6.44 சதவீதம் அதிகரித்து, 69,793 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து பிரிவுகளிலும், ஒட்டுமொத்த வாகன விற்பனை, 1.79 சதவீதம் குறைந்து, 21.62 லட்சமாக சரிவடைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் முடிந்ததால், வாகன விற்பனை குறைந்துள்ளது. எனினும், பரவலான பருவ மழை பொழிவு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கம் போன்றவற்றால், பணப்புழக்கம் பெருகி, வரும் மாதங்களில், வாகன விற்பனை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|