பதிவு செய்த நாள்
12 நவ2017
03:18
மஹிந்திரா நிறுவனம், அதன், ஸ்கார்பியோ, எஸ்.யு.வி.,யின், மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை, டில்லியில், நவ., 14ல் அறிமுகம் செய்கிறது. தற்போது, சாலைகளில் காணப்படும் ஸ்கார்பியோ, 2014ல், முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.இந்த, புதிய ஸ்கார்பியோவின் அதிகாரபூர்வ படம், இன்னும் முழுவதுமாக வெளியிடப்படவில்லை. எனினும், சாலையில் தென்பட்ட அல்லது இணையதளங்களில் கண்டவரை, இப்புதிய மாடலில், பெரியளவில் மாற்றங்கள் இல்லை. எனினும் சில, ‘ஸ்டைல்’ அம்சங்கள் புகுத்தப்பட்டு உள்ளன.முன்புற, ‘கிரில்’ பகுதியில் ஏழு, ‘சிலாப்’கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. சக்கரத்தை பொறுத்தவரை, ‘அலாய் வீல்’ அறிமுகம் செய்யப்படுகிறது. அதன், 2.2 லி., ‘எம்ஹாக்’ இன்ஜினில், வழக்கத்தை விட கூடுதலாக, 20 எச்.பி., அதாவது, 140 எச்.பி., சக்தி உற்பத்தி ஆகும் வகையில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதே, 5 கியர் மேனுவல், 6 கியர், ஏ.எம்.டி., கியர் என, இரு, ‘வேரியன்ட்’களில், புதிய ஸ்கார்பியோ கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|