அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை!அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.65.36 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.65.36 ...
ஜி.எஸ்.டி.: கனடா சொல்லி தரும் பாடம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
00:06

ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி­யின், 28 சத­வீத அடுக்­கி­லி­ருந்த, 178 பொருட்­கள், 18 சத­வீத அடுக்­குக்கு மாற்­றப்­பட்டு உள்ளன. இதே போல், சிறு வர்த்­த­கர்­க­ளுக்­கான, இணக்க (காம்­போ­சிட்) வரி செலுத்­து­வ­தற்­கான உச்ச வரம்பு உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இவை­யெல்­லாம், பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி உள்ளன.


உதா­ர­ண­மாக, ஏன் முத­லில், அதி­க­பட்ச வரி அடுக்­கில், இத்­தனை பொருட்­கள் வைக்­கப்­பட்­டன? இப்­போது, அவற்றை ஏன் குறைக்க வேண்­டும்? அதே போல், பிற பொருட்­க­ளை­யும், வேறு வேறு அடுக்­கு­களில் மாற்றி அமைப்­ப­தும், வீண் சிர­மம் தானே? இதை­யெல்­லாம் முன்­னு­ணர்ந்து, அரசு திட்­ட­மிட்டு இருக்­க­லாமே? சரி­யான வரி அடுக்­கில், பொருட்­களை பொருத்தி இருக்­க­லாமே? இத்­த­கைய கேள்­வி­களில், நியா­ய­மில்­லா­மல் இல்லை. ஆனால், ஓர் உண்­மையை உணர்ந்து கொண்டு தான் மேலே போக வேண்­டும். உல­கில், ஜி.எஸ்.டி., அம­லில் உள்ள, 160 நாடு­க­ளி­லும், இது போல் ஏதோ­வொரு குறை இருக்­கவே செய்­தது.


முத­லில், ஒரு­சில பொருட்­களை, ஓர் அடுக்­கில் வைத்து விட்டு, பின், அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பல்­வேறு சாதக, பாத­கங்­கள் கண்­ட­றி­யப்­ப­டு­கின்றன. வரி அதி­கம் இருப்­ப­தால், ஒரு­சில துறை­களில், உற்­பத்­தியே முடங்கி போக­லாம். அதன் மூலம், வர்த்­த­க­மும், வேலை­வாய்ப்­பு­களும் பறி­போ­க­லாம். வணி­கர்­களின் தன்­னம்­பிக்கை நெருக்­க­டிக்கு உள்­ளா­க­லாம். இவற்றை, முன்­னரே கணிக்க முடி­யாது என்­பது தான் யதார்த்­தம். ஜி.எஸ்.டி., அம­லில் உள்ள நாடு­கள் அனைத்­தும், படிப்­ப­டி­யா­கவே, இத்­த­கைய வரி சீர்­தி­ருத்­தங்­களை, மாற்­றங்­களை செய்­தி­ருக்­கின்றன. ஆனால், ஒரு முக்­கிய விஷ­யம் கவ­னிக்­கத்­தக்­கது. எவ்­வ­ளவு விரை­வாக, இத்­த­கைய மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்­பதே கவ­னத்­துக்­கு­ரி­யது. 2017 ஜூலை அமல்­ப­டுத்­தப்­பட்­ட­தில் இருந்து தொடர்ச்­சி­யாக, ஜி.எஸ்.டி., கவுன்­சில், அதன் நடை­முறை சிக்­கல்­களை அவ­தா­னித்து வரு­கிறது.


வணி­கர்­கள், சிறு வர்த்­த­கர்­கள், தொழில் துறை­யி­னர் ஆகிய அனை­வ­ரும் சந்­திக்­கும் இடர்­க­ளை­யும், சிர­மங்­க­ளை­யும் காது கொடுத்­துக் கேட்­கிறது. உள்­நாட்டு உற்­பத்தி அள­வில், ஜி.எஸ்.டி., ஏற்­ப­டுத்­தும் பாதிப்­பு­க­ளை­யும், அது கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­கிறது. மேலும், வரி விகி­தங்­கள் குறைக்­கப்­படும் போது, அதன் பலன், பொது­மக்­களை போய் சேரு­கி­றதா என, பார்க்­கிறது. மாநில நிதி அமைச்­சர்­களும், மத்­திய அர­சின் அமைச்­ச­ரவை செய­லர்­களும், அவற்றை கணக்­கில் வைத்து, ஒவ்­வொரு கவுன்­சில் கூட்­டத்­தி­லும், ஒரு­சில சலு­கை­க­ளையோ, மாறு­தல்­க­ளையோ, முன்­னேற்­றங்­க­ளையோ செய்­கின்­ற­னர்.


மற்ற நாடு­க­ளோடு ஒப்­பி­டும் போது, பொறுப்­பு­ணர்­வோ­டும், விரைந்­தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் மாறு­தல்­களே, இங்கே கவ­னத்தை ஈர்க்­கிறது. இத்­த­கைய சிர­மங்­களை, நாம் மட்­டுமே சந்­திக்­க­வில்லை. நமக்கு முன், ஜி.எஸ்.டி.,யை அமல்­ப­டுத்­திய நாடு­களே, நமக்கு வர­லாற்று பாடங்­கள். 1991 ஜன., 1ல், கன­டா­வில், ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தப்­பட்­டது. அங்கே நம்­மி­டம் இருக்­கும், மத்­திய, ஜி.எஸ்.டி., – மாநில, ஜி.எஸ்.டி., போன்றே, ஜி.எஸ்.டி., – எச்.எஸ்.டி., என, இரு விகி­தங்­கள் நடை­மு­றை­யில் உள்ளன.இதை, அங்கே அறி­மு­கப்­ப­டுத்­திய பிர­த­மர், பிரெ­யின் முல்­ரோனி என்­ப­வர், அதற்கு முன், அங்கே நடை­மு­றை­யில் இருந்த உற்­பத்­தி­யா­ளர் விற்­பனை வரி விகி­தம், 13.5 சத­வீ­த­மாக இருந்­தது. இதை மாற்றி அமைத்து, 7 சத­வீத, ஜி.எஸ்.டி.,யை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அதற்­குள், கன­டா­வுக்­குள் கடும் விமர்­ச­னங்­கள், எதிர்ப்­பு­கள்.


கடந்த, 1993ல் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில், அவ­ரது கட்­சி­யான, பிரா­கி­ர­சிவ் கன்­சர்­வே­டிவ் பார்ட்டி மண்­ணைக் கவ்­வி­யது. முந்­தைய தேர்­த­லில், 169 இடங்­களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தி­ருந்த கட்சி, 1993 தேர்­த­லில், இரண்டே இரண்டு இடங்­களில் மட்­டுமே வெற்றி பெற்­றது என்­றால் பார்த்­துக் கொள்­ளுங்­கள்.


அவ்­வ­ளவு எதிர்ப்பு; அவ்­வ­ளவு வெறுப்பு!

இன்­றைக்­கும், ஜி.எஸ்.டி., என்­றால், முகஞ்­சு­ளிக்­காத வணி­கர்­கள் இல்லை. சொல்­லப் போனால், கன­டா­வில் அடுத்­த­டுத்து வந்த பிர­த­மர்­கள், ஜி.எஸ்.டி.,யை ஒழித்து விடு­வோம் என்ற வாக்­கு­று­தியை கொடுத்தே போட்டி இட்­ட­னர். ஆனால், அவர்­க­ளால், அதை ஒழிக்க முடி­ய­வில்லை. தவ­றாக வாக்­கு­றுதி கொடுத்­து­விட்­டோம் என, மன்­னிப்பு கேட்­டது தான் மிச்­சம். அவர்­க­ளால், ஜி.எஸ்.டி., விகி­தத்தை குறைக்­கத்­தான் முடிந்­தது. தற்­போது கன­டா­வில், 5 சத­வீத, ஜி.எஸ்.டி., வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. நம் நாட்­டில் இருக்­கும், ஐ.ஜி.எஸ்.டி., போன்றே, அங்கே இருக்­கும் ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி.,க்கு பெயர், எச்.எஸ்.டி., அது மாநி­லத்­துக்கு மாநி­லம் வேறு­பட்­டா­லும், தோரா­ய­மாக, 15 சத­வீ­தம் வரை உள்­ளது.தற்­போ­தும், இதி­லி­ருந்து விலக்­குக் கேட்­கும் தொழிற்­பி­ரி­வி­னர் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளு­டைய தேவையை மனத்­தில் இருத்தி, கனடா அரசு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்­க­வும் செய்­கிறது.


அதே போல், ‘ஊபர்’ கார் சேவை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., அல்­லது, எச்.எஸ்.டி., விதிக்­கப்­படும்; அதன் மூலம், பெரும் வரி வரு­வாய் உரு­வா­கும் என, அந்­நாட்டு நிதி அமைச்­சர், தன் பட்­ஜெட் உரை­யி­லேயே குறிப்­பிட்டு உள்­ளார். ஆக, ஜி.எஸ்.டி.,க்குள் பொருட்­களை, வேறு வேறு விகி­தங்­க­ளுக்கு மாற்­று­வதோ, வரி கட்­ட­மைப்­பில் இருந்து முற்­றி­லும் நீக்­கு­வதோ புதி­தல்ல. மேலும், மக்­க­ளுக்கு சிர­மம் தரா­மல், அதே சம­யம், அர­சின் வரு­வாய் அள­வும் குறைந்து விடா­மல், சமச்­சீ­ரான அள­வில் வைத்­துக் கொள்­வ­தும் ஒரு கலை.கனடா முன்­னாள் பிர­த­மர், பிரெ­யின் முல்­ரோனி இன்று, தன் முயற்­சி­யைக் கண்டு, தானே மகிழ்ச்சி கொள்­கி­றார். ‘‘கன­டா­வின் பொரு­ளா­தா­ரம் வளர, ஜி.எஸ்.டி., உதவி உள்­ளது. அர­சுக்கு, நிலை­யான வரு­மா­னத்தை ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்­ளது.


‘‘தனி­ந­பர் மற்­றும் நிறு­வன வரி­களை குறைக்­க­வும், ஜி.எஸ்.டி., உதவி உள்­ள­தோடு, குறைந்த வரு­வாய் உள்ள எளிய மக்­க­ளுக்கு, வரிச்­ச­லு­கை­கள் பெற­வும் வழி செய்­துள்­ளது,’’ என, பேசி இருக்­கி­றார். ஜி.எஸ்.டி., போன்ற மிகப்­பெ­ரும் முயற்­சி­களை, மிகத் துல்­லி­ய­மாக திட்­ட­மிட்டு செயல்­ப­டுத்­து­வது சிர­மம். ஆனால், குறை­களும், சிக்­கல்­களும், வருத்­தங்­களும் தென்­படும் போது, அவற்றை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்­யும் முனைப்­பும், வேக­மும், கூரு­ணர்­வும் வேண்­டும். ஜி.எஸ்.டி., கவுன்­சி­லின் சுறு­சு­றுப்பு, அதைத் தான் வெளிப்­ப­டுத்­து­கிறது.இரு விஷ­யங்­கள் அவ­சி­ய­மா­னவை. ஜி.எஸ்.டி.,யால் விலை­வா­சி­கள் உயர்ந்­து­வி­டக் கூடாது. அது, பொது­மக்­க­ளுக்­குச் சிர­மம். மறு­பக்­கம், உற்­பத்­தி­யும் பாதித்­து­வி­டக் கூடாது. இத­னால், வேலை­வாய்ப்­புக்­கும், மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்­கும், வளர்ச்­சிக்­குமே பாதிப்பு. நுகர்­வோர் முனை­யில் தாயாக அர­வ­ணைத்து, தொழில் துறை­யி­னர் முனை­யில், தன­ய­னாக அக்­கறை காட்டி நெறிப்­ப­டுத்­து­வ­தன் மூலம், அரசு, ஜி.எஸ்.டி.,யை செம்­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும்.


– ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)