ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு ... ... ஜி.எஸ்.டி.: கனடா சொல்லி தரும் பாடம்! ஜி.எஸ்.டி.: கனடா சொல்லி தரும் பாடம்! ...
அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
00:02

பொரு­ளா­தார நிகழ்­வு­களும், அறி­விப்­பு­களும், நம்மை தின­மும் தாக்­கும் ஒரு கால கட்­டத்­தில் வாழ்­கி­றோம். மாற்­றங்­கள் விரை­வு­ப­டுத்­தப்­படும் இந்­நே­ரத்­தில், அவற்றை சரி­யாக அறிந்­தும், புரிந்­தும், நம் வாழ்க்கை சார்ந்த முடி­வு­க­ளையோ, தொழில் சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளையோ எடுக்க வேண்­டிய, அவ­சர கால கட்­டத்­தி­னுள் இருக்­கி­றோம்.


வேகம், மிக அவ­சி­யம். வாய்ப்பை நழுவ விட்­டால், அதை பிறர் பறிக்­கக் காத்­தி­ருக்­கும் அவ­சர போட்டி சூழல். தொழில் வளர்ச்சி சற்றே தொய்­வாக தோன்­றி­னா­லும், துரித மாற்­றங்­கள் நிக­ழும் கால கட்­டம். இதன் அடிப்­ப­டைக் கார­ணம், அதி­வேக சூழல் மாற்­றம். இன்று, தொழில் மற்­றும் முத­லீடு செய்­வோர் புரிந்து கொள்ள வேண்­டிய முக்­கி­ய­மான உண்மை, நாம் சூழலை தான் ஜெயிக்க முற்­ப­டு­கி­றோம் என்­பதே. போட்­டி­யா­ளரை விட்­டு­விட்டு, சூழல் களம் மீது, முழுக் கவ­னம் செலுத்த வேண்­டும். அதுவே, நிரந்­தர வெற்­றிக்கு வழி­வ­குக்­கும். போட்­டி­யா­ளர்­கள் சூழலை மறந்தோ அல்­லது ஏற்க மறுத்தோ இருந்­தால், அதே தவறை நாம் செய்­யா­மல் இருக்க, சூழல் சார்ந்த ஈடு­பா­டும், கவ­ன­மான நட­வ­டிக்­கை­யும் வித்­தி­டும்.


நம் நாட்டு பொரு­ளா­தார எதிர்­கா­லம், சீரான பாதை­யில் அமைய, விரை­வாக மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்­டும். அந்த மறு­சீ­ர­மைப்பு, பல நகர்­வு­கள் சார்ந்­தது. வங்­கி­களை வேக­மாக மறு­சீ­ர­மைத்து, மீண்­டும் வளர்ச்­சிக்கு வழி­வ­குப்­பது, பெரும் சிக்­க­லில் இருக்­கும் பல நிறு­வ­னங்­களை, வெளிப்­ப­டைத் தன்­மை­யான முறை­யில், புதிய பாதை­யில் செலுத்­து­வது, வரி அமைப்பை மாற்­றி­ய­மைத்து, மேலும், வரி ஏய்ப்பை ஒழிப்­பது, தனி­யார் முத­லீட்­டின் வேகத்தை கூட்­டு­வது, சிறு மற்­றும் குறுந்­தொ­ழில்­களை அமைப்பு சார்ந்த முறைக்­குள் கொண்டு வரு­வது என, இப்­படி பல போர்க்­கால நட­வ­டிக்­கை­களை ஒருங்­கி­ணைத்து கொண்டு வர வேண்­டிய பணியை, மத்­திய அரசு செய்ய முற்­பட்­டி­ருக்­கிறது.


இந்த சூழலை கடந்து சிந்­திப்­போர் மட்­டுமே, நாளைய வெற்­றிக்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை, இன்றே எடுக்க முடி­யும். நாளைய சூழ­லுக்கு தேவை­யான பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில், இன்று பங்­கேற்­போர் மட்­டுமே, நாளை வெற்றி அடை­வர். நம் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை. அது திசை­மா­றி­னா­லும், மீண்­டும் வெற்­றிப் பாதைக்கு திரும்பி வந்­து­வி­டு­கிறது. அதை திசை திருப்பி அழிக்க முற்­படும் அர­சி­யல் தான், தொடர்ந்து தோல்வி கண்­டி­ருக்­கிறது. இது, தொழில் மற்­றும் முத­லீடு செய்­வோர் கவ­னம் கொள்ள வேண்­டிய, முக்­கிய வர­லாற்று பாடம்.


நாம் என்ன செய்ய வேண்­டும்? முக்­கி­ய­மாக, இன்­றைய செய்­தி­களில் வரும் முத­லீட்டு முடி­வு­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய, நாளைய மாற்­றங்­களை தெளி­வாக கணிக்க வேண்­டும். நேற்­றைய தவ­று­களை தாண்டி வந்து, நாளைய வாய்ப்­பில் எப்­படி பங்­கேற்­க­லாம் என, சிந்­திக்க வேண்­டும். பல நிறு­வ­னங்­கள், கடந்த கால தவ­று­களை பின்­னுக்கு தள்­ளி­விட்டு, நாளைய வாய்ப்பை நோக்கி வேக­மாக நகர துவங்க முற்­ப­டு­கின்றன. பங்­குச் சந்தை பெரு நிறு­வ­னங்­கள் இதில் அடக்­கம். அவற்­றில், நாமும் சிறிது பங்­கேற்­க­லாம் அல்­லது நாம் நடத்­தும் தொழிலை விரி­வாக்­கம் செய்து, நாளைய வெற்­றிக்கு வித்­தி­ட­லாம். பழை­யன கழி­த­லும் (தவ­று­களை நிறுத்­தி­விட்டு) புதி­யன புகு­த­லும் (நேர்­பா­தை­யில் செல்­லு­தல்) மட்­டுமே, நாளைய வெற்­றிக்கு வித்­தி­டும். கடந்த காலத்தை கடந்து செல்­லும் காலத்­தில் நாம் இருக்­கி­றோம்.

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)