ஜி.எஸ்.டி., குறைக்கப்படாததால் சிமென்ட் துறையினர் ஏமாற்றம்ஜி.எஸ்.டி., குறைக்கப்படாததால் சிமென்ட் துறையினர் ஏமாற்றம் ... அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! ...
ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2017
03:21

புதுடில்லி, நவ. 12–‘சோப்பு, ஷாம்பூ, வாஷிங் பவு­டர் உட்­பட, 210 பொருட்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., குறைக்­கப்­பட்டு உள்­ள­தால், அவற்­றின் விற்­பனை விலை குறைக்­கப்­படும்’ என, நுகர்­பொ­ருட்­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் அறி­வித்­துள்ளன.ஜி.எஸ்.டி., கவுன்­சில், நேற்று முன்­தி­னம், 210 பொருட்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி.,யை குறைப்­ப­தாக அறி­வித்­தது.அவற்­றில், ஷாம்பூ, டிடர்­ஜன்ட், சாக்­லேட், சுவிங்­கம், அழகு சாத­னங்­கள், கைக் கடி­கா­ரங்­கள் உள்­ளிட்ட, 178 பொருட்­க­ளுக்­கான வரி, 28லிருந்து, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. அனைத்து உண­வ­கங்­க­ளுக்­கும், 5 சத­வீ­தம் என, ஒரே சீரான வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. புதிய வரி விகி­தம், 15 முதல் அம­லுக்கு வரு­கிறது.இந்­நி­லை­யில், வரி குறைந்து உள்­ள­தால், நுகர்­பொ­ருட்­கள் விலையை குறைக்க உள்­ள­தாக, பல நிறு­வ­னங்­கள் அறி­வித்­துள்ளன.பதஞ்­சலிபதஞ்­சலி ஆயுர்­வேதா புரா­டெக்ட்ஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ‘வர­வேற்­கத்­தக்க இந்த முடி­வால், அடித்­தட்டு மக்­கள் பய­ன­டை­வர். சோப்பு, டிடர்­ஜென்ட், பற்­பசை, ஷாம்பூ ஆகி­யவை, ஏழை, பணக்­கா­ரர் பாகு­பா­டின்றி, அனை­வ­ரா­லும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன. இப்­பொ­ருட்­களின் வரி குறைக்­கப்­பட்டு உள்­ள­தால், அவற்­றின் விற்­பனை விலை குறைக்­கப்­படும்’ என, கூறப்­பட்­டுள்­ளது.ஹிந்­துஸ்­தான் யூனி­லி­வர்பற்­பசை முதல், அழகு சாத­னங்­கள் வரை, அன்­றாட பயன்­பாட்டு பொருட்­களை விற்­பனை செய்­யும், ஹிந்­துஸ்­தான் யூனி­லி­வர் நிறு­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறு­கை­யில், ‘ஜி.எஸ்.டி., குறைக்­கப்­பட்டு உள்­ள­தால், நுகர்­வோர் பெரி­தும் பய­ன­டை­வர்.‘வரி குறைப்­பால் கிடைக்­கும் ஆதா­யத்தை, விற்­பனை கடை­கள் முதல் நுகர்­வோர் வரை வழங்க, நிறு­வ­னம் முடிவு செய்­துள்­ளது’ என்­றார்.மாரிக்கோகுக்­கர், ஸ்டவ், டியோ­ட­ரன்ட், பிளேடு, வாஷிங் பவு­டர், சமை­ய­லறை சாத­னங்­கள், வாட்­டர் ஹீட்­டர், பேட்­டரி உள்­ளிட்ட, பல்­வேறு பொருட்­க­ளுக்­கான வரி, 28லிருந்து, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.‘‘இத­னால், இப்­பொ­ருட்­களின் விலை குறை­யும்; மக்­களின் நுகர்­வும் அதி­க­ரிக்­கும்,’’ என, மாரிக்கோ நிறு­வ­னத்­தின் தலைமை நிதி அதி­காரி, விவேக் கர்வே தெரி­வித்து உள்­ளார்.ஜூலை­யில், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மான பின், மாரிக்கோ நிறு­வ­னம், ‘பாரா­சூட்’ உள்­ளிட்ட, கேச பரா­ம­ரிப்பு எண்­ணெய் வகை­கள் விலையை, 5 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. அது போல, சபோலா சமை­யல் எண்­ணெய் விலை­யும், 3-4 சத­வீ­தம் குறைக்­கப்­பட்டு உள்­ளது என, அவர் மேலும் கூறி­னார்.மாண்­ட­லிஸ் இந்­தியா‘கேட்­பரி டெய்ரி மில்க், ஸ்னிக்­கர்ஸ், ஓரியோ பிஸ்­கட்’ உட்­பட, பல்­வேறு உண­வுப் பொருட்­களை, மாண்­ட­லிஸ் இந்­தியா நிறு­வ­னம் விற்­பனை செய்­கிறது.இந்­நி­று­வ­னத்­தின் செய்தித் தொடர்­பா­ளர் கூறு­கை­யில், ‘எங்­கள் தயா­ரிப்­பு­களை, குழந்­தை­கள் முதல், முதி­யோர் வரை அதி­க­மா­னோர் பயன்­ப­டுத்­து­ கின்­ற­னர்.‘ஜி.எஸ்.டி., குறைப்­பால் கிடைக்­கும் பயன்­களை, நுகர்­வோ­ருக்கு வழங்க முடிவு செய்­துள்­ளோம். அத­னால், எங்­கள் தயா­ரிப்பு பொருட்­களின் விலையை குறைக்க, முடிவு செய்­துள்­ளோம்’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)