சில்லரை விற்பனை 1 லட்சம் கோடி டாலராக உயரும்சில்லரை விற்பனை 1 லட்சம் கோடி டாலராக உயரும் ... இந்திய மதிப்பில் அதிரடி உயர்வு : 64.63 இந்திய மதிப்பில் அதிரடி உயர்வு : 64.63 ...
நிறுவனங்களின் நிதிநிலை ரகசியங்கள் ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் முன்னதாக கசிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2017
00:13

மும்பை : நிறு­வ­னங்­களின் நிதி­நிலை அறிக்­கை­கள், அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி வரு­வ­தற்கு சில நாட்­கள் முன்­பா­கவே, ‘வாட்ஸ் ஆப்’ குழு­வில் கசி­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது. இது, பங்கு வர்த்­த­கத்­தில் ஆதா­யம் ஈட்­டு­வ­தற்­காக, சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களின், ‘உள்­குத்து’ வேலை­யாக இருக்­குமோ என, சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

சரிவு:
செய்தி நிறு­வ­ன­மான, ‘தாம்­சன் ராய்ட்­டர்ஸ்’ மேற்­கொண்ட ஆய்­வில், இந்த தகி­டு­தத்­தம் தெரிய வந்­துள்­ளது. இந்­நி­று­வ­னம், டாக்­டர் ரெட்­டீஸ் லேபா­ரேட்­ட­ரிஸ் நிறு­வ­னத்­தின், ஏப்., – ஜூன் வரை­யி­லான, காலாண்டு நிதி நில­வ­ரம் குறித்த கணிப்பை வெளி­யிட்­டி­ருந்­தது. அதில், ரெட்­டீஸ் லேப்., 300 கோடி ரூபாய் லாப­மீட்ட வாய்ப்பு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், ஜூலை, 24ல், ‘மார்க்­கெட் சாட்­டர்’ என்ற, ‘வாட்ஸ் ஆப்’ குழு­வில், ‘டாக்­டர் ரெட்­டீஸ் லேப் நிறு­வ­னம், 50 கோடி ரூபாய் இழப்பை சந்­திக்க வாய்ப்பு உள்­ளது’ என, தக­வல் வெளி­யா­னது. அதே போல, மூன்று நாட்­கள் கழித்து, ஜூலை, 27ல், ரெட்­டீஸ் லேப்., வெளி­யிட்ட முதல் காலாண்டு நிதி­நிலை அறிக்­கை­யில், 58.70 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்து உள்­ள­தாக கூறப்­பட்­டி­ருந்­தது. இது, சந்தை எதிர்­பார்ப்­பிற்கு மாறாக இருந்­த­தால், அன்று, அந்­நி­று­வ­னத்­தின் பங்கு விலை, 4.4 சத­வீ­தம் சரி­வ­டைந்­தது.

மறுப்பு:
இது போல, 12 நிறு­வ­னங்­களின் காலாண்டு முடி­வு­கள், வெளி வரு­வ­தற்கு முன்­பா­கவே, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்­களில், அது குறித்த, சரி­யான தக­வல்­கள் வெளி­யாகி உள்ளன. இது, அந்­நி­று­வ­னங்­களின் பங்கு விலை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதை கண்­டு­பி­டித்த ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம், ‘மார்க்­கெட் சாட்­டர்’ குழு­வில், தக­வல் வெளி­யிட்ட மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்­டது.

எதிர்­மு­னை­யில், நிஷாந்த் வாஸ் என, தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்ட நபர், ‘தான் அவ்­வாறு எந்த தக­வ­லை­யும் வெளி­யி­ட­வில்லை’ என, மறுத்து விட்­டார். பின், அதே எண்­ணில் தொடர்பு கொண்டு, ‘நிறு­வன தக­வலை முன்­கூட்­டியே வெளி­யிட்­ட­தாக கூறு­வது, ஆதா­ர­மற்­றது’ என, தெரி­வித்து உள்­ளார். அவர், பங்­குத்­த­ரகு சேவை­யில் ஈடு­படும், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ் நிறு­வ­னத்­தின் பகுப்­பாய்­வா­ளர் என்­பது தெரிய வந்­துள்­ளது. இது போல, மேலும் சில, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்­களில், தக­வல் பரி­மா­றப்­பட்டு உள்­ளது.

‘பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள, ஒரு நிறு­வ­னத்­தின் நிதி நில­வ­ரத்தை, முன்­கூட்­டியே கசிய விட்டு, ஆதா­யம் காணு­வது, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ விதி­மு­றை­க­ளின்­படி குற்­ற­மா­கும். ‘இதற்கு, 25 கோடி ரூபாய் வரை, அப­ரா­தம் மற்­றும் சிறை தண்­டனை விதிக்க இடம் உள்­ளது’ என, பங்கு வர்த்­த­கர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

விளக்கம்:
பங்கு விலை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய, அதி­கா­ர­பூர்­வ­மற்ற எந்­த­வொரு அறிக்­கை­யை­யும் நிறு­வ­னம் வெளி­யி­டு­வ­தில்லை. நிறு­வ­னங்­கள் குறித்த ரக­சிய தக­வல்­களை பாது­காக்க, வலு­வான கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.
-ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)