பதிவு செய்த நாள்
01 டிச2017
23:54

அடிலெய்டு:உலகின் மிகப்பெரிய, 100 மெகாவாட் லித்தியம் பேட்டரி, தெற்கு ஆஸ்திரேலியாவின் மின் தொகுப்பில், நேற்று இணைக்கப்பட்டது.அமெரிக்காவில், மின் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைவர், எலன் மஸ்க்.
இவர், தெற்கு ஆஸ்திரேலிய அரசுக்கு, உலகின் மிகப்பெரிய, 100 மெகாவாட் லித்தியம் பேட்டரியை சப்ளை செய்யும் ஆர்டரை, செப்., இறுதியில் பெற்றார். அவர், '100 நாட்களுக்குள், பேட்டரியை சப்ளை செய்ய முடியாவிட்டால், அதை இலவசமாக தருகிறேன்' என, ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தார்.ஆனால், 60 நாட்களில், பேட்டரியை தயாரித்து வழங்கி விட்டார்.
இதையடுத்து நேற்று, தெற்கு ஆஸ்திரேலியாவின், ஜேம்ஸ் டவுன் நகரில் உள்ள மின் தொகுப்புடன், பேட்டரி இணைக்கப்பட்டது. இது, மின் வெட்டு காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 30 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டது.ஆஸ்திரேலியாவின் மின் தேவையில், காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, புயலின் போது, தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|