பதிவு செய்த நாள்
05 டிச2017
00:24

புதுடில்லி:அன்னிய வர்த்தக கொள்கையின் இடைக்கால சீராய்வு அறிக்கையை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, இன்று வெளியிடுகிறார்.இது, ஏற்றுமதியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு, தீர்வளிப்பதாக இருக்கும் என, தெரிகிறது.
குறிப்பாக, ஜி.எஸ்.டி.,யில் முன்கூட்டியே வரி செலுத்தி, சரக்கு ஏற்றுமதிக்கு பின், வரியை திரும்பப் பெறும் நடைமுறை ரத்தாகுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நடைமுறை காரணமாக, செயல்பாட்டு மூலதனம் முடங்கி, தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
அக்டோபரில், ஏற்றுமதி வளர்ச்சி, 1.12 சதவீதம் பின்னடைவைக் காண, இதுவும் ஒரு காரணம் என, கூறப்படுகிறது.இதற்கான தீர்வும், ஏற்றுமதி வளர்ச்சிக்கான கொள்கை சீர்திருத்தங்களும், இன்று அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2015 ஏப்.,1ல், அன்னிய வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2020ல், ஏற்றுமதியை, 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2016 – 17ம் நிதியாண்டில், ஏற்றுமதி, 27,425 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|