பதிவு செய்த நாள்
06 டிச2017
00:25

புதுடில்லி:நுகர்பொருட்கள் விற்பனையில், குறுகிய காலத்தில், பிரமாண்ட வளர்ச்சியை கண்டுள்ள, பாபா ராம்தேவின், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அடுத்து, சூரிய மின் சக்தி உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஆச்சார்ய பால்கிருஷ்ணா கூறியதாவது:நிறுவனத்தின் சுதேசி கொள்கைப்படி, அடுத்து, சூரிய மின் சக்தி துறையில் கால் பதிக்க உள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடும், சூரிய மின் சக்தி வசதி பெற வேண்டும். அதற்கான முயற்சியில், பதஞ்சலி களமிறங்குகிறது.
கிரேட்டர் நொய்டாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில், இங்கு உற்பத்தி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பதஞ்சலி நிறுவனம், இந்தாண்டு துவக்கத்தில், அட்வான்ஸ் நேவிகேஷன் அண்டு சோலார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்நிறுவனம் மூலம், பதஞ்சலி, சூரிய மின் சக்தி சாதனங்கள் தயாரிப்பில், கால் பதிக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|