மாலை நேர நிலவரம், இறங்கி - ஏறிய தங்கம் விலைமாலை நேர நிலவரம், இறங்கி - ஏறிய தங்கம் விலை ... ‘நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை’ ‘நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை’ ...
பொது துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2017
03:37

புதுடில்லி : ‘‘எந்­த­வொரு பொதுத் துறை வங்­கி­யை­யும் மூடும் திட்­டம் இல்லை’’ என, மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் அறி­வித்­துள்ளன.

கடந்த சில நாட்­க­ளாக, சமூக ஊட­கங்­களில், சரி­வர செயல்­ப­டாத பொதுத்­துறை வங்­கி­கள் சில­வற்றை மூட உள்­ள­தா­க­வும், 15 வங்­கி­கள், 5 பெரிய வங்­கி­களின் கீழ் ஒன்­றி­ணைய உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் பர­வின. இத­னால், வங்­கி­யில், ‘டிபாசிட்’ செய்­துள்­ளோர் பீதி­ய­டைந்து, தங்­கள் கிளை­களை அணுகி விசா­ரிக்­கத் துவங்­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பொதுத் துறை வங்­கி­கள் சில­வற்றை மூட உள்­ள­தாக சமூக வலை­த­ளங்­கள் உள்­ளிட்ட ஊட­கங்­களில் வெளி­யான தக­வல் உண்­மை­யல்ல. வெறும் வதந்தி. ரிசர்வ் வங்கி, ஒரு சில வங்­கி­களை, ‘பி.சி.ஏ.,’ பட்­டி­ய­லில் இணைத்­துள்­ளது. இதன் மூலம், இவ்­வங்­கி­கள், ரிசர்வ் வங்­கி­யின் பிரத்­யேக கண்­கா­ணிப்­பின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ளன. பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மூலம் இவ்­வங்­கி­களின் சொத்து மதிப்பு சரி­வ­டை­யா­மல் பார்த்­துக் கொள்­ளப்­படும்.

குறிப்­பிட்ட வங்­கி­கள், அவற்­றின் செயல்­பா­டு­களை சீர­மைத்து, வாராக் கடனை குறைத்து, சொத்து மதிப்பை நிலை நிறுத்­தும் நோக்­கில், இந்த எச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கடந்த, 2002 முதல் அம­லில் உள்ள, ‘பி.சி.ஏ.,’ வழி­காட்டு நடை­முறை, ஏப்­ர­லில் திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது. இது, பொது­மக்­களின் வழக்­க­மான வங்கி நடை­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த, கொண்டு வரப்­பட்ட நடை­முறை அல்ல. ஆகவே, வங்கி மூடல் தொடர்­பான வதந்­தி­களை நம்ப வேண்­டாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, மத்­திய நிதிச் சேவை­கள் செய­லர் ராஜீவ் குமார் கூறி­ய­தா­வது: எந்த வங்­கி­யை­யும் மூடும் திட்­டம் மத்­திய அர­சுக்கு இல்லை. பொதுத் துறை வங்­கி­களை வலுப்­ப­டுத்­தவே, 2.11 லட்­சம் கோடி ரூபாய்க்கு மறு பங்கு மூல­தன திட்­டத்தை அரசு அறி­வித்­துள்­ளது. அத­னால், வதந்­தி­களை நம்ப வேண்­டாம். பொதுத் துறை வங்­கிகளை சீர­மைக்­கும் திட்­டம், தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

ரூ.17,000 கோடி இழப்பு:
கடந்த, 2016 –17ம் நிதி­யாண்­டில், பல்­வேறு மோச­டி­க­ளால், வங்­கி­க­ளுக்கு, 16,789 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. திருட்டு, கொள்ளை போன்ற சம்­ப­வங்­களில், வங்­கி­கள், 65.30 கோடி ரூபாய் இழப்பை கண்­டுள்ளன. இது, நடப்பு நிதி­யாண்­டின் முதல் அரை­யாண்­டில், 18.48 கோடி ரூபா­யாக உள்­ளது. கணினி வாயி­லான மோச­டி­களை தடுக்க, ரிசர்வ் வங்கி, ‘சைபர்’ பாது­காப்பு குழுவை அமைத்­துள்­ளது.
சிவ் பிரதாப் சுக்லா, நிதித் துறை இணை அமைச்சர்

பிரத்யேக கண்காணிப்பு:
ரிசர்வ் வங்கி, பொதுத் துறை­யைச் சேர்ந்த, பேங்க் ஆப் இந்­தியா, ஐ.டி.பி.ஐ., பேங்க், இந்­தி­யன் ஓவர்­சீஸ் பேங்க், யூகோ பேங்க் ஆகி­ய­வற்றை, பிரத்­யேக கண்­கா­ணிப்பு திட்­டத்­தின் கீழ் கொண்டு வந்­துள்­ளது. இவ்­வங்­கி­கள், சுதா­ரித்­துக் கொண்டு, வர்த்­த­கத்தை சீர­மைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நகல் கரன்சி:
சமீ­பத்­தில், ஒரே வரிசை எண் உள்­ள­தாக பறி­மு­தல் செய்­யப்­பட்ட உயர் மதிப்பு கரன்­சி­கள், ‘ஸ்கேன்’ செய்­யப்­பட்டு, நக­லெ­டுக்­கப்­பட்­ட­வை­யா­கும்
-பி.ராதாகிருஷ்ணன், நிதித் துறை இணை அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)