பதிவு செய்த நாள்
23 டிச2017
16:04

புதுடில்லி: ஏர்டெல் மற்றும் செல்கான் நிறுவனங்கள் இணைந்து செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் எனும் புதிய மொபைல்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
4ஜி வசதி கொண்ட என்ட்ரி-லெவல் பீச்சர்போன் இந்தியவில் ரூ.1,249 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் ரூ.2,749 செலுத்தி போனினை வாங்க வேண்டும். இதில் ரூ.1,500 வரை கேஷ்பேக் முறையில் 36 மாதங்களில் திரும்ப பெற முடியும்.
எவ்வித சலுகையும் இன்றி இதே போனினை ரூ.2,999 விலையிலும் வாங்கிட முடியும். செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.169க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் முதல் 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இதேபோல் 36 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.1,000 கேஷ்பேக் பெற முடியும்.
செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ்:
- 4.0 இன்ச் ஃபுல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்- 512 எம்பி ரேம்- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி- 3.2 எம்பி பிரைமரி கேமரா- 2 எம்பி செல்ஃபி கேமரா- 1800 எம்ஏஎச் பேட்டரி
செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் மொபைல்போனில் மைஏர்டெல் ஆப், ஏர்டெல் டிவி, விண்க் மியூசிக் போன்ற ஆப்கள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ். போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், எஃப்.எம். ரேடியோ மற்றும் எம்பிஇஜி4 வீடியோ வசதிகளை கொண்டிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|