பதிவு செய்த நாள்
24 டிச2017
07:31
எந்தெந்த பொருட்களுக்கு, 5 சதவீத சலுகை வரி விதிப்பு உண்டு?ரேஷன் கடைகளில் வாங்கப்படும் மண்ணெண்ணெய், வீட்டு உபயோகத்துக்கான, எல்.பி.ஜி., சிலிண்டர்கள், இயற்கை மற்றும் ரசாயன உரங்கள், பிராண்டட் மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட- தானியங்கள், அரிசி, இயற்கை தேன், இட்லி- – தோசை மாவு, சர்க்கரை, டீ, வறுத்த காபிக்கொட்டை, சமையல் எண்ணெய்...குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள், ஊதுபத்திகள், சாம்பிரானி, கையால் செய்யப்படும் வத்திப்பெட்டிகள், காக்ரா மற்றும் சப்பாத்திகள், கடலை மிட்டாய், பொரி உருண்டை, வெட்டப்பட்ட உலர்ந்த மாங்காய்கள், முந்திரி, உலர் திராட்சை, பிராண்டு அல்லாத மிக்சர், சேவ் உள்ளிட்ட தின்பண்டங்கள், மெலிதாக்கப்பட்ட வறட்சியான தேங்காய்...பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள், பதனிடப்பட்ட விலங்கு தோல்கள், நெய்யப்பட்ட பட்டு, பருத்தி துணிகள், பல்வேறு வகையான நுால்கள், 1,000 ரூபாய் வரையிலான ஆடைகள், 500 ரூபாய் வரையிலான காலணிகள்...ஜவுளி பொருட்கள், கைவினைப் பொருட்கள், வணிக சின்னம் இல்லாத சித்த, ஆயுர்வேத மருந்துகள், நிலக்கரி போன்ற பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 5 சதவீத சலுகை வரி வசூலிக்கப்படும்.
எந்தெந்த பொருட்களுக்கு, 12 சதவீத வரி விதிப்பு விதிக்கப்படும்?வெட் கிரைண்டர், ஸ்டவ், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பால், காய்கறிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வறுத்த சிக்கரி, பாஸ்தா, ஜாம், மணத்திற்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள்...சோயா பால், அச்சக மை, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மர, இரும்பு, எக்கு அடுப்புகள், ‘எக்ஸ் – ரே’ புகைப்பட தகடுகள் மற்றும் படம், பருத்தி மற்றும் சணலால் ஆன கைப்பை, ஷாப்பிங் பை, மரத்தால் ஆன சாமான்கள்...காகிதப் பை, கண்ணாடி, காகிதம், நடைபயிற்சி -குச்சிகள், இருக்கை குச்சிகள், சைக்கிள் பம்பு, செயற்கை அல்லது இயற்கை இழை நுால், விவசாய இயந்திரம்...உலோகம் அல்லது மற்ற பொருட்களுடன் வலுப்படுத்தப்பட்ட, டிரான்ஸ்மிஷன் அல்லது கன்வேயர் பெல்ட்கள் அல்லது பெல்ட்டிங், கவச வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 12 சதவீத வரி வசூலிக்கப்படும்.
எந்த மாதிரியான பொருட்களுக்கு, 18 சதவீத வரி விதிப்பு உண்டு?பெரு வாரியாக, நடுத்தர மக்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கு, சராசரி வரியாக, 18 சதவீத வரி விதிப்பு போடப்படுகிறது. அப்படிப்பட்ட சில பொருட்கள்: பற்பசை, சோப்பு, ஹேர் ஆயில், ஷேவிங் சோப் மற்றும் கிரீம்கள், முகச்சவரத்துக்கு பின் பயன்படுத்தும் திரவங்கள், குளியல் சோப்பு, சலவைத்துாள்...சலவை சோப்பு, பெண்களுக்கான அழகு சாதன மூலப்பொருட்கள், டிவி, வானொலி, குக்கர்கள், வாட்டர் ஹீட்டர், சர்க்கரையால் செய்யப்பட்ட தின்பண்டங்கள், சாக்லேட்கள், இனிப்பு மாவு பண்டங்கள்...எழுது பொருட்கள், பிரின்டர்கள், கணினி,- மார்பிள், கிரானைட் உள்ளிட்ட தரையில் பதிக்கும் கற்கள், தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் பல்வேறு மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கு, 18 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.
எந்த மாதிரியான பொருட்களுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது?அத்தியாவசியத்தை தாண்டி, சொகுசு என்ற வரையறையின் எல்லையில் உள்ள, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏர்கண்டிஷனர், வாக்குவம் கிளீனர், கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்ற பொருட்களுக்கும், சிகரெட், புகையிலை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு, 28 சதவீத வரி வசூலிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|