‘சர்வதேச பொருளாதாரம் செழிக்க ஒரே உலகம்; ஒரே கரன்சி தேவை’‘சர்வதேச பொருளாதாரம் செழிக்க ஒரே உலகம்; ஒரே கரன்சி தேவை’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.02 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.02 ...
மியூச்சுவல் பண்டு முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2017
00:32

புதுடில்லி : நடப்­பாண்டு, மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­களில், 6 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை தொடர்ந்து, வங்­கி­களில், ‘டிபா­சிட்’ அதி­க­ரித்­துள்­ளது. அத­னால் வங்­கி­கள், டிபா­சிட் மீதான வட்­டியை குறைத்து வரு­கின்றன. தங்­கம், ரியல் எஸ்­டேட் போன்ற முத­லீ­டு­கள் மீதான வரு­வா­யும் குறைந்­துள்­ளது. இத்­த­கைய சூழ­லில், பங்­குச் சந்­தை­யின் எழுச்சி கார­ண­மாக, பங்­கு­களில் முத­லீடு செய்­வது அதி­க­ரித்து வரு­கிறது. இவ்­வகை முத­லீட்­டிற்கு, நுணுக்­க­மான ஆய்வு அவ­சி­யம் என்­ப­தால், புதிய முத­லீட்­டா­ளர்­கள் பாது­காப்பு கருதி, மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில், ஆர்­வ­மு­டன் முத­லீடு செய்­கின்­ற­னர்.

பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றில், முத­லீடு செய்­யும் மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­கள், இடர்ப்­பாடு குறை­வான, அதே சம­யம், நியா­ய­மான வரு­வாயை அளிக்­கக் கூடி­ய­வை­யாக உள்ளன. ‘செபி’யின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள், மியூச்­சு­வல் பண்டு விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­கள், மொபைல் போன் மூலம் முத­லீடு செய்­யும் வசதி, கிரா­மப்­பு­றங்­களில் பர­வ­லாகி வரும் இணைய தொடர்பு போன்­றவை, மியூச்­சு­வல் பண்டு துறை வேக­மாக வளர்ச்சி காண துணை புரிந்­துள்ளன.

இத­னால், நடப்­பாண்டு, ஜன., – நவ., வரை, 6 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக, மியூ­சு­வல் பண்டு திட்­டங்­களில் முத­லீடு செய்­யப்­பட்டுள்­ளது. இதன் மூலம், மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, சாதனை அள­வாக, 23 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, 2016 டிச., நில­வ­ரப்­படி, 16.46 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.

இந்­தாண்டு மட்­டும், 1.70 கோடி முத­லீட்­டா­ளர்­கள், மியூச்­சு­வல் பண்­டு­களில் முத­லீடு செய்­து உள்­ள­னர். இதன் மூலம், மியூச்­சு­வல் பண்டு முத­லீட்­டா­ளர்­கள் எண்­ணிக்கை, 6.50 கோடி­யாக உயர்ந்­து உள்­ளது. நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, மத்­திய அரசு எடுத்து வரும் நட­வ­டிக்­கை­கள், நிதிச் சந்­தை­யில், ரிசர்வ் வங்கி, ‘செபி’ மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்­தங்­கள் போன்­ற­வற்­றால், புத்­தாண்­டில், மியூச்­சு­வல் பண்டு துறை மேலும் வளர்ச்சி காணும் என, நிதி வல்­லு­னர்­கள் கருத்து தெரி­வித்து உள்­ள­னர்.

சொத்து மதிப்பில் சாதனை:
இந்­தி­யா­வில் உள்ள, 42 மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, இந்­தாண்­டில், 40 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த, ஐந்து ஆண்­டு­களை விட, இது, 24 சத­வீ­தம் அதி­க­மா­கும். 2014 மே மாதம், முதன்­மு­றை­யாக, மியூச்­சு­வல் பண்­டு­களின் சொத்து மதிப்பு, 10 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யது. இது, மூன்­றரை ஆண்­டு­களில், இந்­தாண்டு நவம்­பர் இறு­தி­யில், சாதனை அள­வாக, 23 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. தொடர்ந்து ஐந்து ஆண்­டு­க­ளாக, மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­களின் முத­லீடு அதி­க­ரித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)