பதிவு செய்த நாள்
25 ஜன2018
02:47

புதுடில்லி : ‘‘இந்தாண்டு செப்டம்பர் முதல், நாட்டின் வேலைவாய்ப்பு புள்ளி விபர அறிக்கை வெளியிடப்படும்,’’ என, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர், ராஜிவ் குமார் தெரிவித்து உள்ளார்.அவர், ‘ராஜ்யசபா டிவி’க்கு அளித்த பேட்டி:நாட்டின் வேலைவாய்ப்பு, வேலையில்லாத திண்டாட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி, சரிவு குறித்து வெளியாகும் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன.எனவே, நம்பகத்தன்மை உள்ள வேலைவாய்ப்பு தகவல்களை திரட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஆலோசனை வழங்க, 2017 மே மாதம், குழு ஒன்று அமைக்கப்பட்டது.‘நிடி ஆயோக்’ முன்னாள் துணைத் தலைவர், அரவிந்த் பனகாரியா தலைமையிலான, இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, குடும்பங்களில் வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது.இதையடுத்து, செப்., முதல், நாட்டின் வேலைவாய்ப்பு புள்ளி விபரம், காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும். இத்துடன், நிறுவனங்களின் ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு ஆய்வு மேற்கொண்டு, வேலைவாய்ப்பு புள்ளி விபரம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|