அமைப்பு சாரா பிரிவிற்கு, ‘யுவின்’ அட்டை; பி.எப்., – இ.எஸ்.ஐ., பணிக்கொடை எல்லாம் கிடைக்கும்அமைப்பு சாரா பிரிவிற்கு, ‘யுவின்’ அட்டை; பி.எப்., – இ.எஸ்.ஐ., பணிக்கொடை ... ... ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ...
கடையாணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2018
01:41

@subtitle@‘ஆடி கியூ – 5’ சென்­னை­யில் அறி­மு­கம்@@subtitle@@
ஆடி’ நிறு­வ­னத்­தின், ‘கியூ 5’ சொகுசு கார், சில மாற்­றங்­க­ளு­டன், சந்­தை­யில் கள­மி­றக்­கப்­பட்டு உள்­ளது. ‘கியூ 5’ அறி­மு­க­மா­னது முதல், அதன் போட்­டி­யா­ளர்­களை பின்­னுக்கு தள்ளி, நீண்ட கால­மாக முத­லி­டத்தை பெற்­றி­ருந்­தது தெரிந்­ததே. தற்­போது, மேலும் சில கவர்ச்­சி­யான அம்­சங்­கள் சேர்க்­கப்­பட்டு, இரண்­டாம்தலை­முறை, ‘கியூ 5’ கார் சந்­தைக்­குள் வந்துள்ளது.இதன் அறி­முக விழா, சென்­னை­யில் சில தினங்­க­ளுக்கு முன் நடந்­தது. ‘ஆடி இந்­தியா’ நிறு­வன தலை­வர், ரஹில் அன்­சாரி, காரை அறி­மு­கம் செய்து வைத்­தார்.இதில், ‘எலக்ட்­ரிக் போல்­டிங் மிரர், இரு புறங்­க­ளி­லும் ஆன்ட்டி – லாக் பிரேக்­கிங், ஆட்டோ டிம், தானே திறந்து மூடும் மேற்­கூரை, லெதர் அப்­ஹோல்ஸ்ட்ரி, எட்டு ஏர்­பேக், ரியர் வியூ கேமரா, முன்­புற மற்­றும் பின்­புற பார்க்­கிங் சென்­சார்­கள், புதிய எலக்ட்ரோ மெக்­கா­னிக்­கல் பவர் ஸ்டீ­ரிங் உட்­பட, சிறப்பு அம்­சங்­கள் ஏரா­ளம்.மேலும், 190 எச்.பி., திறனை உரு­வாக்­கும், ‘35 டிடிஐ இன்­ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்ளது. இது புறப்­பட்ட, 7.9 வினா­டி­களில், 100 கி.மீ., வேகத்தை எட்­டு­மாம். உச்­ச­பட்ச வேகம், 218 கி.மீ.,சென்னை ஷோரூ­மில் இதன் விலை, 53.25 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.
@subtitle@ஹோண்டா@@subtitle@@
‘கிரா­சியா’ விற்­பனை விறு­விறு!‘ஹோண்டா’ நிறு­வ­னம், சமீ­பத்­தில் அறி­மு­கம் செய்த, ‘கிரா­சியா’ ஸ்கூட்­ட­ரின் விற்­பனை அதி­க­ரிக்க துவங்கி உள்­ளது. கடந்த தீபா­வளி பண்­டி­கை­யின் போது, கிரா­சியா அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. அப்­போ­தில் இருந்து, அதன் விற்­பனை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.கடந்தாண்டு முடி­வில், இந்­தி­யா­வில் அதி­கம் விற்­ப­னை­யா­கும் முதல், 10 ஸ்கூட்­டர்­களின் வரி­சை­யில், கிரா­சி­யா­வும் இடம் பெற்­றது.தற்­போது அறி­மு­கம் செய்­யப்­பட்டு, இரண்­டரை மாதங்கள் ஆகி­யுள்ள நிலை­யில், அதன் விற்­பனை, 50 ஆயி­ரத்தை கடந்­துள்­ளது. இந்த சிறப்பு குறித்து, அந்­நி­று­ வ­னத்­தி­னர் கூறும் போது, ‘கிரா­சி­யா­வின் ஸ்டைல், எல்.இ.டி., ஹெட்­லேம்ப், டிஜிட்­டல் மீட்­டர், த்ரீ ஸ்டெப் இகோ இன்­டி­கேட்­டர்’ போன்ற வச­தி­கள், வாடிக்­கை­யா­ளர்­களை பெரி­தும் கவர்ந்­துள்ளன. இதுவே, விற்­பனை அதி­க­ரிப்­புக்கு கார­ணம்’ என்­கின்­ற­னர்.இதன் விலை, 60 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.
@subtitle@டேட்­சன்@@subtitle@@
‘ஸ்மார்ட் டிரைவ் ஆட்டோ’‘டேட்­சன்’ நிறு­வ­னம், ‘ரெடி – கோ ஹேட்ச்­பேக் காரில், ஏ.எம்.டி., எனும், ஆட்டோ கியர் வச­தி­யு­டன் கூடிய காரை அறி­மு­கம் செய்­துள்­ளது. இந்­தி­யா­வில், ‘ஹேட்ச்­பேக்’ ரக காரில், ஏ.எம்.டி., வச­தியை, ‘ஆல்டோ கே 10’ காரில், மாருதி சுசூகி நிறு­வ­னம் தான் அறி­மு­கம் செய்­தது. அதன்­பின், பல நிறு­வ­னங்­கள், ஏ.எம்.டி.,கார்­களை அறி­மு­கம் செய்­தன.எனி­னும், டேட்­சன் நிறு­வ­னம், ‘தற்­போது களத்­தில் உள்ள, ஏ.எம்.டி., கார்­களை விட, அதிக வச­தி­களை உடைய கார், இந்த, ரெடி – கோ ஸ்மார்ட் டிரைவ்’ தான் என, கூறு­கிறது.இதில், விருப்­பப்­பட்­டால், கிய­ரிலோ அல்­லது கியரை பயன்­ப­டுத்­தா­மலோ இயக்­கும், ‘டூயல் டிரை­விங் மோட்’ வசதி உள்­ளது. மேலும், குறைந்த வேகத்­தில் இயங்க உத­வும், ‘ரஷ் ஹவர் மோட், பெரிய கேபின் மற்­றும் பூட் ஸ்பேஸ், புளூ டூத் ஆடியோ’ போன்ற வச­தி­கள் உண்டு. மேலும், ‘1.0 லி., மூன்று சிலிண்­டர் இன்­ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது. இந்த கார், ரூபி ரெட், லைம் கிரீன், ஒயிட், கிரே, சில்­வர் ஆகிய நிறங்­களில் கிடைக்­கும். இதன் ஷோரூம் விலை, 3.86 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்கு­கிறது.

@subtitle@யு.எம்.,@@subtitle@@
3 பைக்­கு­கள் அறி­மு­கம்அமெ­ரிக்க மோட்­டார் சைக்­கிள் நிறு­வ­ன­மான, யு.எம்., இந்­தி­யா­வில் மூன்று புதிய, ‘க்ரூய்­சர்’ ரக பைக்­கு­களை அறி­மு­கம் செய்ய உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின், ‘ரென­கேட்’ வரிசை பைக்­கு­க­ளுக்கு, இந்­தி­யா­வில் ஏற்­க­னவே நல்ல மவுசு உள்­ளது. அதை தொடர்ந்து, ‘கமாண்டோ ஐயன் 300, கமாண்டோ 300 எல்.எக்ஸ்., வேகாஸ் 300’ என, மூன்று புதிய பைக்­கு­களை, விரை­வில் கள­மி­றக்­கு­கிறது.அவற்­றில் தற்­போது, இங்கு விற்­ப­னை­யா­கும் அதன் பைக்­கு­களில் உள்ள அதே, ‘279.5 ‘சிசி’ சிங்­கிள் சிலிண்­டர், லிக்­விட் கூல்டு இன்­ஜின்’ பொருத்­தப்­பட உள்­ளது. இது, 24.8 எச்.பி., திறனை உரு­வாக்­கக் கூடி­யது. சிற்­சில தொழில்­நுட்ப மாற்­றங்­கள் மட்­டும் இருக்­கும். தற்­போது, விலையை குறைத்து விற்­ப­தற்­காக, இன்­ஜி­னில், ‘கார்­ப­ரேட்­டரை’ யு.எம்., பொருத்தி உள்­ளது.எனி­னும், 2020ல், பி.எஸ்., 6 சுற்­றுச்­சூழல் விதி­முறை அம­லுக்கு வரும் போது, கார்­ப­ரேட்­ட­ருக்கு பதில், ‘பியூ­யல் இன்­ஜெக்­டர்’களை பொருத்தி விற்க முடி­வெ­டுத்து உள்­ளது. இந்த மூன்று பைக்­கு­களை தவிர, ‘பேட்­டரி’யால் இயங்­கும், ‘ரென­கேட் எலக்ட்­ரிக்’ பைக்­கை­யும், யு.எம்., விரை­வில் அறி­மு­கம் செய்ய உள்­ளது.


@subtitle@போர்டு @@subtitle@@
எண்­டெ­வர் பனோ­ரெ­மிக் ரூபிங்‘போர்டு’ நிறு­வ­னம், அதன், எண்­டெ­வர் 2.2 லிட்­டர் மாடல்,எஸ்.யு.வி.,யில் புதிய, ‘எலக்ட்­ரிக், பனோ­ர­மிக் சன்­ரூப்’ பொருத்தி, சந்­தை­யில் கள­மி­றக்கி உள்­ளது. அதா­வது, கண்­ணா­டி­யி­லான, திறந்து மூடக்­கூ­டிய மேற்­கூ­ரையை, இந்த, எஸ்.யு.வி., பெற்­றுள்­ளது. 3.2 லி., எண்­டெ­வர் டைட்­டே­னி­யம் டிரிம் மாட­லில் தான், இது­வரை இந்த வசதி இடம் பெற்­றி­ருந்­தது.இந்­நி­லை­யில், புதி­தாக களத்­தில் அறி­மு­க­மாகி உள்ள, ‘எண்­டெவர் பனோ­ரெ­மிக் ரூபிங்’ மாட­லின் விலை, டில்லி ஷோரூ­மில், 29.57 லட்சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.எனி­னும், இந்த புதிய மாட­லில், தொழில்­நுட்­பத்­தில் வேறு எதுவும் மாற்­றம் செய்­யப்­ ப­ட­வில்லை. இருப்­பி­னும், காரின் உட்­புறத்­தில் ஓசையை குறைத்­துக் காட்டும், ‘நாய்ஸ் கேன்­ச­லே­ஷன்’ வசதி, புதி­தாக இடம் பிடித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)