இறக்குமதிக்கு அதிக வரி இந்தியா மீது டிரம்ப் காட்டம்இறக்குமதிக்கு அதிக வரி இந்தியா மீது டிரம்ப் காட்டம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.3,800 கோடி இழப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு ரூ.11,000 கோடி மோசடி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
00:41

மும்பை:பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யின், மும்பை கிளை­யில், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் முறை­கேடு நடந்­துள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது. இந்த தக­வல்வெளி­யா­னதை அடுத்து, நேற்று, இவ்­வங்­கி­யின் பங்கு விலை, கடு­மை­யாக வீழ்ச்சி கண்­டது.

இத­னால், இப்­பங்­கு­களில் முத­லீடு செய்­தோ­ருக்கு, நேற்று ஒரே நாளில், 3,௮00 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.பஞ்­சாப் நேஷ­னல் வங்கி உய­ர­தி­கா­ரி­கள், மும்பை, பரோ­டி­யில் உள்ள வங்கி கிளை­யில், 5ம் தேதி, ஆய்வு மேற்­கொண்­ட­னர்.

அப்­போது, வங்கி அதி­கா­ரி­க­ளான, கோகுல்­நாத் ஷெட்டி, மனோஜ் ஹனு­மந்த் கராட் ஆகி­யோர், சில வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ஏற்­று­ம­திக்­கான கடன் பொறுப்­பேற்பு ஆவ­ணங்­களில் மோசடி செய்­தது தெரிந்­தது.

நடந்தது என்ன?

இந்த மோசடி கார­ண­மாக, வங்­கிக்கு, 280 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்டு உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டது. இதை­ய­டுத்து, வங்கி அளித்த புகா­ரின்­படி, டய­மண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்­போர்ட்ஸ், ஸ்டெல்­லார் டய­மண்ட் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்­கு­தா­ரர்­க­ளான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்­னு­பாய் சோக்சி ஆகி­யோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்­தது.

இந்­நி­லை­யில், சி.பி.ஐ., மேற்­கொண்டு நடத்­திய விசா­ர­ணை­யில், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு, ‘மெகா’ மோசடி நடந்­துள்­ளது தெரிய வந்­துள்­ளது. இதை­ய­டுத்து, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, நேற்று, மும்பை பங்­குச் சந்­தைக்கு அனுப்பி உள்ள அறிக்கை:

மும்பை பரோடி கிளை­யில், முறை­கேடு நடந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது. ஒரு­சில வாடிக்­கை­யா­ளர்­கள் ஆதா­யம் அடை­வ­தற்­காக, அதி­கா­ர­பூர்­வ­மற்ற தக­வல் பரி­மாற்­றங்­கள் நடந்­துள்ளன.அவற்­றின் அடிப்­ப­டை­யில், இதர வங்­கி­கள், வெளி­நா­டு­களில் உள்ள அந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கடன் வழங்கி உள்ளன.

விசாரணை

வழக்­க­மான வங்கி நடை­மு­றை­கள் போன்றே, இந்த பரி­வர்த்­த­னை­கள் நடந்­துள்ளன.
இந்த வகை­யில், 177 கோடி டாலர் அள­விற்கு, மோசடி பரி­வர்த்­த­னை­கள் நடந்து உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இதில், வங்­கிக்கு உள்ள பொறுப்பு மற்­றும் பரி­வர்த்­த­னை­களின் நம்­ப­கத்­தன்மை உள்­ளிட்­டவை, சட்ட விதி­மு­றை­க­ளின்­படி முடிவு செய்­யப்­படும்.

இந்த மோசடி குறித்து விசா­ரித்து, குற்­ற­வா­ளி­க­ளுக்கு சட்­டப்­படி தண்­டனை பெற்­றுத்
தரும்­படி, சி.பி.ஐ.,யிடம், வங்கி ஏற்­க­னவே தெரி­வித்­துள்­ளது.வங்கி, ஒளி­வு­ம­றை­வற்ற, துாய்மை­யான செயல்­பா­டுகளை தொடர்ந்து பேணும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மும்பை பங்­குச் சந்­தை­யில், முன்­தி­னத்தை விட, நேற்று, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி பங்­கின் விலை, 9.81 சத­வீ­தம் குறைந்து,145.80 ரூபா­யில் நிலை பெற்­றது. மோசடி தொகை, வங்­கி­யின் மொத்த சந்தை மூல­த­ன­மான, 36 ஆயி­ரம் கோடி ரூபா­யில், ஒரு பங்கு; 4.5 லட்­சம் கோடி ரூபாய் மொத்த கட­னில், 2.55 சத­வீ­தம் ஆகும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 15,2018
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் பிப்ரவரி 15,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)