பதஞ்சலி பொருட்கள் ரூ.9000 கோடிக்கு விற்பனைபதஞ்சலி பொருட்கள் ரூ.9000 கோடிக்கு விற்பனை ... ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.84 % சரிவு ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.84 % சரிவு ...
ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
15:04

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் மேக்சிமம் பிரீபெயிட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.999க்கு கிடைக்கும் புதிய திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

இந்தியாவில் வட-கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் உள்ளிட்ட வட்டாரங்கள் தவிர மற்ற இடங்களில் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகிறது.

அதிவேக 1ஜிபி டேட்டா நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி-யாக (40Kbps) குறைக்கப்படும். புதிய மேக்சிமம் பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. பி.எஸ்.என்.எல். மேக்சிமம் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை முதல் 182 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் டில்லியில் உள்ள வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு 60 பைசா வரை செலுத்த வேண்டும்.

182-வது நாள் முதல் 365 நாட்கள் வரை அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்திற்கு 60 பைசா செலுத்த வேண்டும். இதே கட்டணம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கும் பொருந்தும். எஸ்.எம்.எஸ். ஒன்றிற்கு 25 பைசாவும், தேசிய எஸ்.எம்.எஸ். அனுப்ப 35 பைசா செலுத்த வேண்டும்.

பி.எஸ்.என்.எல். உடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 360 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ திட்டங்களின் விலை ரூ.4,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜியோ திட்டத்தில் ரூ.4,999க்கு ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு 360 நாட்களுக்கு 350 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதேபோன்று ஜியோ வழங்கும் ரூ.9,999 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 360 நாட்களுக்கு 750 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ.999 திட்டத்தில் 90 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)