பி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்புபி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்பு ... பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
02:26

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்­டி­யில், முந்­தைய இரு வார சரி­வுக்­குப் பின், கடந்த வாரம் பெரிய மாற்­ற­மில்­லா­மல், சிறிய சரி­வில் வர்த்­த­கம் நடை­பெற்­றது. ஏறத்­தாழ, 185 புள்­ளி­கள் குறைந்து, 10 ஆயி­ரத்து, 435 புள்­ளி­க­ளு­டன் முடி­வுற்­றது.
இம்­மாத ஆரம்­பத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட மத்­திய பட்­ஜெட் மற்­றும் அதில் கொண்டு வரப்­பட்ட நீண்ட கால மூல­தன ஆதா­யத்­தின் மீதான வரி விதிப்பு ஆகி­ய­வற்­றால் சரிவு நீடித்து வரு­கிறது.அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்ட தொழில் வளர்ச்சி, அரசு கரு­வூல ஆதா­யம் அதி­க­ரிப்பு போன்ற கார­ணங்­க­ளால் பங்­குச் சந்­தை­யின் சரிவு, அனைத்து நாடு­க­ளி­லும் காணப்­பட்டது.
மேலும், கடந்த வாரம் வெளி­வந்த வங்­கி­களின் வாராக்­க­டன் அளவு, முந்­தைய ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன் இருந்­ததை விட அதி­க­ரித்­த­தும், அதை எதிர்­கொள்ள ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய கொள்­கை­களும் சந்­தையை பாதித்­தன. மேலும், பஞ்­சாப் நேஷ­னல் பேங்­கில் நடை­பெற்ற, 11 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் பண மோச­டி­யும், சந்­தை­யில் பாதிப்பை உண்­டாக்­கி­யது.பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான செபி, நம் உள்­நாட்டு பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், பிற நாடு­களில் வர்த்­த­க­மா­வது, வரும், 6 மாதத்­திற்கு முழு­மை­யாக நிறுத்­தப்­படும் என அறி­வித்­தது. இத­னா­லும் சந்­தை­யில் பாத­க­மான போக்கு ஏற்­பட்டு, பங்­கு­கள் விலை சரிய கார­ண­மா­னது. குறிப்­பாக, பொதுத் துறை வங்­கி­களின் பங்­கு­கள் வீழ்ச்சி அடைந்து வரு­கின்றன.
இன்று, அமெ­ரிக்கா மற்­றும் சில ஆசிய சந்­தை­க­ளுக்கு விடு­முறை தின­மா­கும். இந்த வாரத்தை பொறுத்­த­வரை, முக்­கிய பொரு­ளா­தார கார­ணி­கள் எது­வும் வெளி­யா­கப் போவ­தில்லை. வரும் வியா­ழன் அன்று, ‘எப் அண்டு ஓ’ செட்­டில்­மென்ட் உள்­ளது. இம்­மா­தம் இது­வரை, நிப்டி, 6.5 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை கண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த ஓர் ஆண்டு கால­மாக நிப்டி, 100 நாட்­கள் சரா­ச­ரி­யான, 10 ஆயி­ரத்து, 318 புள்­ளி­க­ளுக்கு கீழே வியா­பா­ரம் நடை­பெ­ற­வில்லை. இது நல்ல, ‘சப்­போர்ட்’ ஆகும். ரெசிஸ்­டென்ட், 11 ஆயி­ரத்து, 40 ஆகும்.
கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்ஐ.டி.சி.,இன்­போ­சிஸ், பஞ்­சாப் நேஷ­னல் பேங்க், ஆதித்ய பிர்லா கேப்­பிட்­டல், சிப்லா

-முருகேஷ் குமார், ரிசர்ச் அனலிஸ்ட்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)