பதிவு செய்த நாள்
23 பிப்2018
02:28

புதுடில்லி : கார்ப்பரேட் நிறுவனங்களில், இரண்டாவது முறையாக நியமிக்கப்படும், தனி இயக்குனர்களை நீக்கும் விதிமுறைகள், மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.தற்போது, ஒரு நிறுவனத்தில், இரண்டாவது முறையாக தனி இயக்குனரை நியமிக்க வேண்டுமென்றால், பங்குதாரர்களின் சிறப்பு கூட்டத்தில், 75 சதவீதம் பேரின் ஆதரவை பெற வேண்டும். அதே சமயம், தனி இயக்குனரை நீக்க வேண்டுமென்றால், பங்குதாரர்களின் சாதாரண கூட்டத்தை கூட்டி, 50 சதவீதம் பேரின் ஆதரவுடன் நீக்கலாம்.இந்த விதியை, சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி, தனி இயக்குனர்களை நீக்குவது,நிறுவன விவகாரங்கள்அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது.இதையடுத்து, இரண்டாவது முறையாக நியமிக்கப்படும், தனி இயக்குனரை நீக்க முடிவெடுத்தால், அவர் தரப்பு வாதத்தை கேட்க, அவகாசம் அளிக்க வேண்டும். அதில் திருப்தியின்றி நீக்க முடிவு செய்தால், சிறப்பு கூட்டத்தை கூட்டி, 75 சதவீத பங்கு முதலீட்டாளர்களின் ஆதரவை பெற வேண்டும் என, விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.இந்த நடவடிக்கை, நிறுவன இயக்குனர் குழுவின் அதிகாரம் சீராகவும், நிர்வாகம் சிறப்பாக நடைபெற உதவும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|