பதிவு செய்த நாள்
09 மார்2018
01:38

மும்பை : ‘‘ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறையை, மேலும் சுலபமாக்கும் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது,’’ என, ஜி.எஸ்.டி., எம் அண்டு இ பிரிவு கமிஷனர், எம்.சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற, 23வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு, ஜி.எஸ்.டி.ஆர்., – 2 மற்றும், ஜி.எஸ்.டி.ஆர்., – 3 படிவங்களை நீக்கி, ஜி.எஸ்.டி.ஆர்., – 1 மற்றும், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படிவங்களை மட்டும் தொடர முடிவு செய்யப்பட்டது. இருந்த போதிலும், இன்னும், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறை கடினமாக உள்ளதாக, வரி செலுத்துவோர் தெரிவிக்கின்றனர்.
தாங்களாகவே கணக்கை தாக்கல் செய்ய முடியாமல், வல்லுனர்கள் உதவியை நாடுவதால், செலவு கூடுவதாகவும் கூறுகின்றனர். இதையடுத்து, ஜி.எஸ்.டி.என்., தொழில்நுட்ப ஆலோசகர், நந்தன் நிலேகனி, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு, மிக எளிமையான வழிமுறையை பரிந்துரைத்து உள்ளார்.
அதன்படி, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் உருவாக்கப்பட்ட பிரிவில்,வணிகர்கள், சப்ளை செய்த பொருட்களுக்கான, ‘இன்வாய்ஸ்’களை பதிவேற்றுவதற்கு பதிலாக, ‘இன்வாய்ஸ்’ விபரங்களை அளித்தால் போதும். கணக்கு தாக்கல் விபரங்கள், தன்னிச்சையாகவே கணினியில் தயாராகி விடும். இதன் மூலம், மிகச் சுலபமாக, ஒரே படிவத்தில் கணக்கு தாக்கல் செய்யலாம். இத்திட்டம், நாளை நடைபெறும், 26வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்த பின், அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. புதிதாக, 34 லட்சம் நிறுவனங்கள், இந்த வரி திட்டத்தின் கீழ் வந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|