பதிவு செய்த நாள்
19 மார்2018
08:02
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது. லிபியா நாட்டின் எண்ணெய் உற்பத்தி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தினசரி உற்பத்தியான 70 ஆயிரம் பேரல்கள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாகவும், கடந்த வாரம் வெளி வந்த, அமெரிக்க எண்ணெய் இருப்பு அளவு, 1.6 மில்லியன் பேரல்கள் குறைந்ததன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
ஒபெக் உறுப்பு நாடுகள், தங்களுடைய மொத்த உற்பத்தியில், தினசரி, 1.8 பில்லியன் பேரல்கள் குறைத்துக் கொள்வது என்ற முடிவை, டிசம்பர் மாதம் வரை நீட்டியதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பெருகி வரும் அமெரிக்க எண்ணெய் உற்பத்தி, விலைக்கு சவாலாக இருக்கிறது.பேக்கர் ஹக்ஸ் நிறுவனத்தின் கணக்குப்படி, செயல்பாட்டில் உள்ள எண்ணெய் குழாய்களின் எண்ணிக்கை, 799 ஆக உயர்ந்துள்ளது. தினசரி உற்பத்தியானது, 10.27 மில்லியன் பேரல்கள் ஆகும்.
மேலும், கடந்த வியாழன் அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பேசுகையில், உலகின் எண்ணெய் இருப்பு அளவு தற்போது குறைந்து வருவதாக கூறினார். இருப்பு அளவு குறைந்த நிலையில், ஏதேனும், ஓர் அசாதாரணமான சூழல் நிகழும் எனில், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், எண்ணெய் விலை உயர்வைக் கண்டது.ஜனவரி மாதம், ஒரு பேரல், 66.65 டாலர் வரை உயர்ந்து, பின் ஏற்பட்ட சரிவினால், 58 டாலர் வரை தாழ்ந்தது. தற்போது உயர்ந்து, ஒரு பேரல், 63.30 என்ற அளவில் உள்ளது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 3995 3870 4185 4300
தங்கம், வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த ஒரு மாத காலமாக, சர்வதேச சந்தையில் சரிவில் வர்த்தகமாகிறது. 1 அவுன்ஸ் தங்கம், அதாவது, 31.104 கிராம் தங்கம், 45 டாலர்கள் குறைந்து, தற்போது, 1,314 டாலர் என்ற நிலையில் உள்ளது.எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்தையிலும், இச்சரிவு பிரதிபலித்தது. நான்கு வாரங்களில், 10 கிராம் தங்கம், 645 ரூபாய் குறைந்து, 30,225 ஆக உள்ளது.
அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு, மற்றும், புதிதாக பொறுப்பேற்றுள்ள, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர், இந்த ஆண்டில் வட்டி விகிதம், மூன்று முறைக்கு மேல் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த தும், விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.பொதுவாகவே, வட்டி விகிதம் உயரும்போது, தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் தன்மை காணப்படும். மேலும், மார்ச் முதல் வாரத்தில் வெளிவந்த, அமெரிக்க நாட்டின் விவசாயம் சாரா பிற துறைகளில், புதிதாக வேலையில் நியமிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வும், அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு உயர காரணமாகியது. மேலும், முதலீட்டு ஆர்வம் குறைந்ததும் ஒரு காரணமாகும்.
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி மற்றும் அரசு கருவூலங்களின் ஆதாயம் பெருகியதும், தங்கம் விலை சரிய காரணமானது.கடந்த வியாழனன்று நடைபெற்ற, 5வது இந்திய சர்வதேச நாணய மாநாட்டில், மத்திய அரசு தங்க வியாபாரத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க, இரண்டு முக்கிய முடிவுகளை அறிவித்தது. ஒன்று, தங்கத்துக்கான ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச். தற்போது இதை வடிவமைக்க ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன.
இரண்டாவதாக, ‘தங்க குழு’ எனும் புதிய அமைப்பை அறிவித்தது. இதில் ரிசர்வ் வங்கி, செபி, நிதியமைச்சகம், வர்த்தக அமைச்சகம் இவற்றின் பிரதிநிதித்துவத்துடன் இக்குழு நிறுவப்படும். இதன் மூலமாகவே, தங்கத்தின் வியாபார கொள்கை, இறக்குமதி, வரி போன்றவை குறித்து முடிவு எடுக்கப்படும். இது மிகப் பெரிய மாற்றத்தை உள்நாட்டு தங்க வர்த்தகத்தில் ஏற்படுத்தும்.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 30,110 29,880 30,395 30,510
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 38,050 37,740 38,790 39,100
செம்பு:
சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவும், அதன் தாக்கமும், செம்பு விலையில் சரிவை ஏற்படுத்தியது. மூன்று வாரங்களாக, செம்பு சரிவில் வர்த்தகமாகிறது.
உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு, அமெரிக்கா அண்மையில் வரி விதித்தது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில், சீனாவும் பாதிப்புக்கு உள்ளானது. தற்போது வர்த்தகப் போர் துவங்கியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். 60 மில்லியன் டாலர் வரி, சீனாவின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா எடுத்த இந்த முடிவு, வியாபார மோதலை உண்டாக்கி உள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகம் தடைபட்டு உள்ளது.
போலந்து நாட்டின், கே.ஜி.எச்.எம்., செம்பு சுரங்கத்தின் உற்பத்தி, அடுத்த ஆண்டில், 18 சதவீதம் உயரும் என்ற தகவலும் செம்பு விலை சரிய காரணமானது. அமெரிக்க நாணயத்தின் மதிப்பு கூடியதும், செம்பு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|