பதிவு செய்த நாள்
19 மார்2018
08:10

ஆயுள் காப்பீடு என்பது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான சூழலில் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடியது. ஒவ்வொருவரும் தேவையான ஆயுள் காப்பீடு பெற்றிருப்பது அவசியம். மேலும், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் தொடர்பான முழு விபரங்களையும் அறிந்திருப்பதும் அவசியம். ஆயுள் காப்பீடு பாலிசி பெறும் போது, மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை:
இலக்கு என்ன: பாலிசி வாங்குவதற்கு முன், ஆயுள் காப்பீட்டு பாலிசி மூலம் பெற விரும்பும் பலன் பற்றிய தெளிவான இலக்கு இருக்க வேண்டும். குறிப்பிட்ட தேவைக்கான பாலிசி பெறுவது நல்லது. பாலிசி காலம் வரை தொடரவும் இது உதவும். நீங்கள் வாங்கும் நோக்கத்திற்கு ஏற்ப பாலிசியின் பல்வேறு அம்சங்கள் அமைந்திருக்கின்றனவா என, பார்க்க வேண்டும். இதன் மூலம் பாலிசியை பெற்ற பின், வருந்த வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
ஆய்வு தேவை: பாலிசி தொடர்பான கையேடுகளை படித்துப் பார்த்து, அதன் பல்வேறு அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். பாலிசியை விற்கும் ஏஜன்ட் தகவல்களை அளிக்கக் கூடும் என்றாலும், சொந்தமாக ஆய்வு செய்வதே நல்லது. தேவை எனில் நிறுவன இணையதளங்களில் உள்ள தகவல்களை பரிசீலிப்பதோடு, நிறுவன பிரதிநிதியிடமும் பேசிப் பார்க்கலாம். மேலும், பாலிசியை தேர்வு செய்வதில் அவசரம் காட்டக்கூடாது.
படிவத்தில் கவனம்: பொதுவாக பலரும் பாலிசிக்கான படிவங்களில் விற்பனையாளர் அல்லது ஏஜன்ட் காட்டும் இடத்தில் கையெழுத்து போட்டு பின், மற்ற விபரங்களை அவர்கள் பூர்த்தி செய்து கொள்ள வைக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். ஆனால் படிவத்தை சொந்தமாக படித்துப் பார்த்து பூர்த்தி செய்வது அவசியம். இதன் மூலம், பாலிசியின் அனைத்து அம்சங்களையும் சரியாக புரிந்து கொள்ள முடியும்.
பெயர் என்ன? ஒரு காப்பீட்டு நிறுவனம் பலவிதமான பெயர்களில் பாலிசிகளை வழங்கலாம். டெர்ம் திட்டம், யூலிப்கள், வழக்கமான திட்டங்கள் என, பலவித பாலிசிகள் இருக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணத்திற்கு, வீட்டுக்கடன் வாங்கும் போது எண்டோமென்ட் பாலிசி ஏற்றது அல்ல: கடனுக்கான பாலிசியே ஏற்றது. எனவே பெயர் மற்றும் பாலிசி அம்சங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
நிறுவன அழைப்பு: பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசியின் தன்மையை நீங்கள் முழுமையாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதை விரும்புகின்றன. பாலிசி பலன்கள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொள்ள இது அவசியமாகிறது. எனவே, நிறுவன பிரதிநிதி அழைத்து பேச காத்திருங்கள். வாழ்க்கை பாதுகாப்பு அளிக்கும் காப்பீட்டு பாலிசியை நீண்ட கால நோக்கில் வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|