திவால் நிறுவனங்களால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு?திவால் நிறுவனங்களால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு? ... ‘உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்த ஒன்றிணைய வேண்டும்’ ‘உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்த ஒன்றிணைய வேண்டும்’ ...
சந்தை நிலவரம்: தொட­ரும் காய்­கறி விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2018
00:24

சென்னை : காய்­கறி விலை, தொடர்ந்து சரி­வில் இருப்­ப­தால் வியா­பா­ரி­கள் விரக்தி அடைந்­துள்­ள­னர்.
சென்னை, கோயம்­பேடு, கொத்­த­வால்­சா­வடி காய்­கறி சந்­தை­களில், சில நாட்­க­ளாக காய்­கறி விலை தொடர்ந்து சரிந்து காணப்­ப­டு­கிறது. சில்­லரை விலை­யில் தக்­காளி, 6 ரூபாய்க்­கும், கோஸ், 7 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­னது. வெண்­டைக்­காய், பீன்ஸ் 15 ரூபாய்க்­கும், புட­லங்­காய், முள்­ளங்கி, சவ்­சவ் உள்­ளிட்­டவை, 10 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யானது.காய்­கறி லாபம், வண்டி வாடகை கூலிக்கு கூட போத­வில்லை என, வியா­பா­ரி­கள் விரக்­தி­யோடு கூறி­னர். ஆனால் விலை வீழ்ச்­சி­யா­லும் கோடை வெயில் தாக்­கத்­தா­லும் மக்­கள் காய்­க­றியை நாடத் துவங்­கி­யுள்­ள­னர். விவ­சா­யம் குறைந்­துள்­ள­தால், அடுத்த சில நாட்­களில் காய்­கறி விலை அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நெல் வரத்து அதி­க­ரிப்பு
கோடை அறு­வ­டை­யின் இரண்டாம் சாகு­படி நெல் வரத்து அதி­க­ரித்­துள்­ளது.
ஜன­வ­ரி­யில் துவங்­கிய கோடை அறு­வ­டையை தொடர்ந்து, இரண்டாம் சாகு­படி முடிந்து, சென்னை அரு­கே­யுள்ள, செங்­குன்­றத்­தில் நெல் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. ஆந்­தி­ரா­வில் நெல்­லுார், நாயு­டு­பேட்­டை­யி­லி­ருந்­தும், திரு­வள்­ளூர் சுற்­று­வட்­டா­ரத்­தி­லி­ருந்­தும் நெல் மூட்­டை­கள் அதி­க­ளவு வந்­துள்­ளது.தற்­போது பாபட்லா நெல் ரகம், 76 கிலோ மூட்டை 1,050 – 1,100 ரூபாய்க்­கும், ரூபாலி நெல் ரகம் 900 – 950 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கிறது.சுகர்­லெஸ் எனப்­படும், எர்­ர­மல்லி நெல் ரகம் 1,300 – 1,400 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. மேலும் வேலுார், திரு­வண்­ணா­மலை மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும், கர்­நா­ட­கா­வில் இருந்­தும் நெல் வரத்து அதி­க­ரித்­துள்­ளது.

சென்னை துறை­மு­கம் சாதனை
சென்னை துறை­மு­கத்­தில், 2017 – 18 நிதி­யாண்­டில், 5 கோடி டன் சரக்கை கையாண்டு சாதனை புரிந்­துள்­ள­து.
தனி­யார் துறை­மு­கங்­க­ளு­டன் கடு­மை­யான போட்­டியை சந்­தித்து வரும், சென்னை துறை­மு­கம், 2017 – 18 நிதி­யாண்­டில், 5 கோடி டன் சரக்கை கையாண்­டுள்­ள­தாக, துறை­முக தலை­வர், ரவீந்­தி­ரன் கூறி­யுள்­ளார். இதே நிலை நீடிக்­கும் பட்­சத்­தில், அண்டை துறை­மு­கங்­க­ளுக்கு, சென்னை துறை­மு­கம் தொடர்ந்து போட்­டியை ஏற்­ப­டுத்­தும் என, எதிர்­பார்க்­க­லாம்.

முட்­டை­கோஸ்:
மதுரை, மேட்­டுப்­பா­ளை­யம், கொடைக்­கா­னல், திண்­டுக்­கல் சுற்­று­வட்­டார பகு­தி­யில், முட்­டை­கோஸ் விளைச்­சல் அதி­க­ரித்­துள்­ளது. இங்கு கடந்த வாரம் ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. தற்­போது பாதி­யாக குறைந்து, 5 ரூபாய்க்கு விற்பனை­யா­கிறது. சாகு­படி அதி­க­ரித்­துள்ள நிலை­யில், தேவை குறைந்­த­தால் விலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இத­னால் வண்டி வாடகை, பறிப்பு கூலி கூட தர­மு­டி­யா­மல், விவ­சா­யி­கள் கவ­லை­ய­டைந்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)