பதிவு செய்த நாள்
27 மார்2018
03:58
சென்னை : வெயிலுக்கு இதம் தரும், வெட்டிவேர் மூங்கில் திரைகள், சதுர அடி 80 – 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.சென்னையில் வெயில் வாட்டத் துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில், மின் துண்டிப்பு பிரச்னையும் துவங்கியுள்ளது. இந்நிலையில், மின்சாரம் போனாலும் கவலையில்லாமல், ‘ஜில்’லென்று இருக்க, வெட்டிவேர் திரைச் சீலைகள் தயாரிப்பு, சென்னையில் விறுவிறுப்பை எட்டியுள்ளது.வெயில் சீசனை ஒட்டி, யானைகவுனி, பெரம்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில், வெட்டிவேர் திரைச்சீலை தயாரிப்பு மும்முரமாகியுள்ளது. கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெட்டிவேர், தரத்திற்கு ஏற்ப, திரைச்சீலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, ஒரு வெட்டிவேர் மூங்கில் திரை, சதுர அடி, 80 – 100 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது. இவை, ஓராண்டு வரை தாக்குப்பிடிக்கும். மூங்கில் திரைகள், சதுர அடி, 40 – 60 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன. இவை ஐந்தாண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|