‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விர்ர்ர்...‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விர்ர்ர்... ... 'ஷூ மறுசுழற்சி' திட்டம் டாடா ஸ்டீல் அறிமுகம் 'ஷூ மறுசுழற்சி' திட்டம் டாடா ஸ்டீல் அறிமுகம் ...
குறை­யும் மல்லி விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2018
01:11

சென்னை: பாரி­முனை மலர் அங்­கா­டி­களில், மல்லி விலை குறைந்­தும், ரோஜா அதி­க­ரித்­தும் விற்­ப­னை­யா­னது. சென்­னைக்கு, ஆந்­திர மாநி­லம் மற்­றும் புறந­கர்­களில் இருந்து மல்லி வரத்து அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், மல்லி விலை, 1 கிலோ, 240 ரூபா­யாக குறைந்­துள்­ளது.வரத்து அதி­க­ரிக்­கும்­பட்­சத்­தில், விலை இன்­னும் குறை­யும். ரோஜா வகை­கள், 1 கிலோ, 120 ரூபா­யி­லி­ருந்து, 160 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. சாமந்தி வரத்து குறைந்து இருப்­ப­தால், 1 கிலோ, 160 ரூபா­யாக உள்­ளது. கும்கி சாமந்தி வரத்து துவங்­கி­யுள்­ளது. இதன் விலை, சில்­லரை விற்­ப­னை­யில் கால் கிலோ, 40 – 50 ரூபா­யாக உள்­ளது.
சூடு­பி­டிக்­கும் பனை­வெல்ல வியா­பா­ரம்
சென்னை: சென்னை புற­ந­கர் மற்­றும் நெடுஞ்­சாலை ஓரங்­களில் பனை­வெல்­லம் விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளது. துாத்துக்­குடி, மதுரை உள்­ளிட்ட இடங்­க­ளி­லி­ருந்து கொண்டு வரப்­படும் பனை­வெல்­லம், சுக்­கு­வெல்­லம் உள்­ளிட்­டவை, சென்னை புற­ந­கர், நெடுஞ்­சாலை ஓரங்­களில் விற்­கப்­ப­டு­கின்றன.
இது குறித்து துாத்துக்­கு­டி­யைச் சேர்ந்த வியா­பாரி, வடிவு கூறி­ய­தா­வது: துாத்துக்­கு­டி­யில் இருந்து பனை தயா­ரிப்­பு­களை, வேனில் நாங்­களே கொண்டு வந்து சென்­னை­யில் விற்­கி­றோம். பனை­வெல்­லம், பனங்­கற்­கண்டு, இஞ்சி, கருப்­பட்டி, மிளகு போட்டு தயா­ரிக்­கும் சுக்­கு­வெல்­லம் அனைத்­தை­யும் நாங்­களே தயா­ரித்து மக்­க­ளுக்கு நேர­டி­யாக விற்­கி­றோம். வெயில் சீச­னுக்கு, பனை தயா­ரிப்பு மிக­வும் ஏற்­றது. வைகாசி வரை சீசன் இருக்­கும். விலை குறை­வா­க­வும் கிடைக்­கும். பனை­வெல்­லம் ஒரு கிலோ, 140 ரூபாய்க்­கும், சுக்­கு­வெல்­லம் ஒரு கிலோ, 200 – 220 ரூபாய்க்­கும், பனங்­கற்­கண்டு ஒரு கிலோ 250 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
சக்க போடு போடும் நாட்டு மருந்து விற்­பனை
சென்னை: உடல் இளைக்க, லேகி­யம் சாப்­பிட்­ட­வர் இறந்த செய்தி ஒரு புறம் இருந்­தா­லும், மறு­பு­றம் நாட்டு மருந்­த­கங்­களில் விற்­பனை சூடு பிடித்­து உள்­ளது.சென்­னை­யில் பாரி­முனை மட்­டு­மின்றி நக­ருக்கு ஒன்­றி­ரண்டு நாட்டு மருந்து விற்­ப­னை­ய­கங்­கள் உள்ளன. இங்கு பாரம்­ப­ரி­ய­மாக விற்­கப்­படும் இயற்கை முறை­யில் தயா­ரிக்­கப்­பட்ட உலர் பழங்­கள், செம்­ப­ருத்தி, கடுக்­காய், திப்­பிலி, சூர­ணம், லேகி­யம் உள்­ளிட்­டவை விற்­கப்­ப­டு­கின்றன.பாரி­முனை மொத்த விற்­பனை நாட்டு மருந்­த­கங்­களில், ஒரு நாளுக்கு, 60ஆயி­ரம் – 1 லட்­சம் ரூபாய் வரை பொருட்­கள் விற்­ப­னை­யா­கின்றன. சில்­லரை விற்­ப­னை­ய­கங்­களில், 10ஆயி­ரம் முதல், 30 ஆயி­ரம் ரூபாய் வரை பொருட்­கள் விற்­ப­னை­யா­கின்றன.கோடை அதி­க­ரிக்­கும் தற்­போ­தைய சூழ­லில், இயற்கை முறை­யில் தயா­ரிக்­கப்­படும் மருந்­து­கள் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது.இது குறித்து, பாரி­முனை நாட்டு மருந்­தக வியா­பாரி பாலாஜி கூறி­ய­தா­வது:75 ஆண்­டு­க­ளாக நாட்டு மருத்­துவ பொருட்­களை தயா­ரித்து விற்­பனை செய்­யும் முன்­னணி நிறு­வன தயா­ரிப்­பு­க­ளையே நாங்­கள் விற்­கி­றோம்.சர்க்­கரை வியாதி, ஆண்மை இழப்பு போன்ற நோய்­க­ளுக்கு, நாட்டு மருத்­துவ தயா­ரிப்­பு­கள் அதி­கம் விற்­ப­னை­யா­கும்.அஷ்­வ­கந்த லேகி­யம், மத­ன­கா­மேஸ்­வர லேகி­யம், ஓரி­தழ் தாமரை, நீலி­பி­ருங்­காதி தைலம், திப்­பிலி, உலர் பழங்­கள் உள்­ளிட்­டவை அதி­கம் விற்­ப­னை­யா­கும் பொருட்­களில் சில.இவை தர்­ம­புரி, ஈரோடு, தோவாளை போன்ற பகு­தி­க­ளி­லி­ருந்து வரு­கின்றன. சர்க்­கரை வியாதி, ஆண்மை இழப்­புக்கு நாட்டு மருத்­து­வத்­தையே பலர் நம்­பி­யுள்­ள­னர்.பதிவு பெற்ற நிறு­வன தயா­ரிப்­பு­களை காலா­வதி தேதி பார்த்து பயன்­ப­டுத்­து­வது பாது­காப்­பா­னது. நாட்டு மருத்­து­வத்தை பொறுத்­த­வரை தவ­றாக பயன்­ப­டுத்­தி­னால் வயிற்­று­வலி, வாந்தி, பேதி அல்­லது தோல் பிரச்னை போன்­ற­வையே ஏற்­படும். உயிர்­ப­லிக்கு லேகி­யம் மட்­டுமே கார­ண­மாக இருக்­காது. இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஏற்­றம் பெறும் காய்­க­றி­கள்
சென்னை: பீன்ஸ், பீட்­ரூட், புடலை உள்­ளிட்ட காய்­கறி விலை மெல்ல ஏறத் துவங்­கி­யுள்ளன.கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் பீட்­ரூட், பட்­டாணி, பீன்ஸ் உள்­ளிட்ட காய்­க­றி­கள் மெல்ல விலை ஏறத் துவங்­கி­யுள்ளன. பட்­டாணி, 60 – 75 ரூபா­யா­க­வும், பீன்ஸ், 1 கிலோ, 25 – 30 ரூபா­யா­க­வும் விற்­கப்­ப­டு­கிறது. அவரை நேற்­றைய விலை­யில் இருந்து, 5 ரூபாய் அதி­க­ரித்து, 1 கிலோ, 25 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. காலி­பி­ள­வர், 20 – 25 ரூபாய் வரை உள்­ளது. வெயில் அதி­க­ரிக்­கத் துவங்­கி­யுள்­ள­தால், காய்­க­றி­கள் விலை மெல்ல உய­ரும் என, வியா­பா­ரி­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)