பதிவு செய்த நாள்
12 ஜூன்2018
00:53

மும்பை;மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில், நீண்ட கால முதலீடுகளை ஈர்க்க, 500 கோடி ரூபாய் முதலீட்டில், தனி நிதியம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலர் குமார் வினய் பிரதாப் கூறியதாவது:கடந்த, 2015–16ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு என, தனி நிதியம் ஏற்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அடுத்த மாதம், இந்த நிதியம் செயல்பட உள்ளது. இது, அடிப்படை கட்டமைப்பு துறை நிறுவனங்கள், அவற்றின் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க துணைபுரியும். அத்துடன், அவை வெளியிடும் கடன் பத்திரங்களின் தகுதியை நிர்ணயிக்கவும் உதவும்.அதன் அடிப்படையில், கடன் பத்திரங்களில், ஓய்வூதிய நிதியம், காப்பீட்டு நிதியங்கள் நீண்ட கால முதலீடுகள் மேற்கொள்ளும்.ஐ.ஐ.எப்.சி.எல்., நிறுவனம், 500 கோடி ரூபாய் மூலதனத்தில், 22.5 சதவீத பங்குடன், இந்த நிதியத்தை ஏற்படுத்த உள்ளது.
இதில், ஆசிய அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு வங்கி, 10 சதவீத பங்கு மூலதனம் மேற்கொள்ள உள்ளது.இத்துடன், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, எல்.ஐ.சி., ஆகியவையும், குறிப்பிட்ட பங்கு மூலதனம் மேற்கொள்ள உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|