பதிவு செய்த நாள்
12 ஜூன்2018
00:52

மும்பை:பார்வையற்றோர் சுலபமாக ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை உணர, சிறப்பு கருவியை வடிவமைப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.கடந்த வாரம் வெளியான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு அறிக்கையில், இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆறு மாதங்களுக்குள், பார்வையற்றோரின் கரன்சி பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கர் மேத்தா கூறியதாவது:பார்வையற்றோர் கரன்சி மதிப்பை அறிந்து கொள்ள, சிறப்பு கருவி குறித்து ரிசர்வ் வங்கி ஆராய்வதை விட, ரூபாய் நோட்டுகளின் அளவில் மாற்றம் செய்தாலே போதுமானது.தற்போது, 20 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் ஒரே மாதியாக உள்ளன.
வண்ணம் தான் மாறியுள்ளது. ரூபாய் மதிப்புக்கேற்ப, அளவுகளில் மாற்றம் செய்தால், பார்வையற்றோர் சுலபமாக பரிவர்த்தனை செய்ய முடியும்.ரூபாய் நோட்டுகளில் 'பிரெய்லி' முறையை புகுத்தலாம் என, கூறப்படுகிறது. ஆனால், பல பேர் கைமாறி, நைந்து போகும் கரன்சிக்கு இந்த முறை சரிப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|