வணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சிவணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சி ... பார்வையற்றோர் கரன்சி பயன்பாட்டிற்கு தனி கருவி பார்வையற்றோர் கரன்சி பயன்பாட்டிற்கு தனி கருவி ...
கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
00:51

கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து மூன்றா­வது வார­மாக, சரி­வில் இருந்து வரு­கிறது. இந்த ஆண்­டின் உச்ச விலை, மே மாதத்­தில் ஒரு பேரல், 72.83 டாலர் என்ற அள­வுக்கு உயர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போது ஒரு பேரல், 9 டாலர் அள­வுக்கு சரிந்து, 65.51 டாலர் வரை வந்­தது.உல­க­ள­வில் கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில், முதல் மற்­றும் இரண்­டாம் இடங்­களில் உள்ள சவுதி அரே­பியா, ரஷ்யா ஆகிய இரு நாடு­களும், கடந்த மே மாதத்­தில் நிலவி வரும் இருப்பு குறைவு மற்­றும் தட்­டுப்­பாட்டை போக்­கு­வ­தற்­காக, உற்­பத்­தியை அதி­க­ரிக்க தீர்­மா­னித்­தன. இதன் விளை­வாக, விலை சரிவு தொடர்ந்­தது.

‘ஒபெக்’ மற்­றும், ‘நான் ஒபெக்’ எனும் எண்­ணெய் உற்­பத்தி கூட்­ட­மைப்பு நாடு­கள், தங்­கள் எண்­ணெய் உற்­பத்­தியை தின­சரி, 1.8 மில்­லி­யன் பேரல் அள­வுக்கு குறைத்­த­தன் காரண­மாக, கடந்த இரு ஆண்­டு­களில், விலை, ‘கிடு கிடு’வென உயர்ந்­தது.இந்த ஒப்­பந்­தம் தற்­போது டிசம்­பர், 2018 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், 22ம் தேதி, ஒபெக் உறுப்பு நாடு­கள் கூட்டம் நடை­பெற உள்­ளது. இதில், உற்­பத்தி குறைப்பு குறித்து தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், ஈரான், ஒபெக் உறுப்­பில் மூன்றாம் தர வரி­சை­யில் உள்ள உற்­பத்தி நாடாகும். அமெ­ரிக்கா, ஈரான் மீது விதித்­தி­ருந்த தடையை திரும்­பப் பெற்ற தற்­போ­தைய சூழலில், அதன் ஏற்­று­மதி எவ்­வாறு இருக்­கும் என்ற எதிர்­பார்ப்­பும் நில­வு­கிறது.வரும் நாட்­களில், சர்­வ­தேச சந்­தை­யில் எண்­ணெய் விலை, 64 டாலர் என்­பது நல்ல சப்­போர்ட் ஆகும். இதை கடக்­காத நிலை­யில், விலை சிறிது உயர வாய்ப்­புள்­ளது.

தங்கம் வெள்ளி

சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம் முந்­தைய வார சரி­வுக்­குப் பின் உயர்ந்து வர்த்­த­க­ம்ஆ­கி­யது. அமெ­ரிக்க நாண­யத்­தின் தொடர் மதிப்பு உயர்­வுக்­குப் பின் ஏற்­பட்ட சரி­வும், வரும் ஜூன், 12ம் தேதி, அமெ­ரிக்கா – வட கொரியா இடை­யே­யான பேச்சு மற்­றும் அது தொடர்­பான ஏதே­னும் அசா­தா­ரண சூழல் ஏற்­ப­ட­லாம் என்ற எண்­ண­மும், தங்­கம் மற்றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை உயர கார­ண­மா­கி­யது.
இந்­திய ஆப­ரண சந்­தை­யில், 24 காரட் தங்­கத்­தின் விலை, கடந்த வாரம், 10 கிராம், 32,000 என்ற நிலை­யைக் கடந்து, 32,050 ரூபாய் என்ற உச்­சத்தை அடைந்­தது.வெள்ளி விலை­யும் கிலோ­வுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 1 கிலோ, 41,100 என்ற நிலையை எட்­டி­யது.கடந்த மே மாதத்­தில், இந்­தி­யா­வின் தங்­கம் இறக்­கு­மதி, 39 சத­வீ­தம் குறைந்து, 77.6 டன்­னாக சரிந்­தது. கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 126.2 டன்­னாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும், 2018ம் ஆண்­டின் முதல் ஐந்து மாதங்­களில், தங்­கம் இறக்­கு­மதி, 42 சத­வீ­தம் குறைந்து, மொத்­தம், 289.3 டன்­னாக உள்­ளது.தென் மேற்கு பரு­வ­மழை தற்­போது அதி­க­ரித்து, விவ­சா­யம் பெரு­கும் நிலை­யில், கிரா­மப்­புற தேவை தங்­கம் மீது உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும், தங்­கம் விலை பெரும்­பா­லும் சர்­வ­தேச கார­ணங்­க­ளால் தான் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது. எனவே, சர்­வ­தேச நிகழ்­வு­களை பொறுத்தே விலை அமை­யும்.

செம்பு

செம்பு விலை, கடந்த ஆண்டு இறு­தி­யில் அதா­வது, ஜூலை முதல் டிசம்­பர் வரை தொடர்ந்து உயர்ந்து, ஐந்து ஆண்டு உச்சத்தை அடைந்­தது. இருப்­பி­னும், இந்த ஆண்டு ஆரம்­பம் முதல், அந்த உயர்வு தொட­ரா­மல் விலை சரிவு போக்கு தொடர்ந்­தது.கடந்த வாரம் மட்­டும், இந்த ஆண்­டின் அதி­கப்­ப­டி­யான விலை உயர்­வாக, எம்.சி.எக்ஸ் பொருள் வணிக சந்­தை­யில், கிலோ­வுக்கு, 35 ரூபாய் அதி­க­ரித்து, 1 கிலோ, 491 ரூபாய் வரை எட்­டி­யது.

கடந்த வெள்­ளி­யன்று வெளி­வந்த, சீனா­வின் செம்பு இறக்­கு­மதி புள்­ளி­வி­ப­ரத்­தில், இறக்­கு­ம­தி­யா­னது, கடந்த ஆண்டு மே மாதத்தை விட, 22 சத­வீ­தம் அதி­க­ரித்து, 4,75,000 டன் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. இதை எதிர்­பார்த்து, சந்­தை­யில் கடந்த வாரம் முழு­வ­தும் அதா­வது, திங்­கள் முதல் வெள்ளி வரை, விலை தின­சரி உயர்வு கண்­டது. இது நீடிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)