பதிவு செய்த நாள்
12 ஜூன்2018
00:54

கோவை:‘பெருந்துறை, சிப்காட்டில் செயல்படும் ஜவுளி பதனிடும் சாய ஆலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க, ‘ஜீரோ லெவல்’ திரவ வெளியேற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்’ என, ‘சைமா’ சங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
தண்ணீர்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில், 35 ஜவுளி பதனிடும் ஆலைகள் இயங்குகின்றன. ஆலை நிர்வாகிகளை அழைத்து, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) நிர்வாகிகள், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.அதில், ‘தமிழகத்தில் ஜவுளி பதனிடும் தொழில் நெருக்கடியில் உள்ளது; குறைவான விலையில் தரமான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, சாயக்கழிவுகளை சுத்திகரிப்பது சவாலாக விளங்குகிறது.
எனினும், பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஜவுளி பதனிடும் ஆலைகள், 10 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து, சுற்றுச்சூழல் விதிகளை பாதுகாக்க, நவீன சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. பல்வேறு சட்டங்களை மதித்து, முன்னுதாரணமாக நடந்து கொள்ளும் ஜவுளி பதனிடும் ஆலைகள், தங்களது கழிவுகளை வெளியேற்றுவதில், ‘ஜீரோ லெவல்’ திரவ வெளியேற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.இவற்றை தொடர்ந்து கண்காணிக்க, மூன்றாம் நபரை (நிறுவனத்தை) நியமிக்கலாம்’ என, ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு
சைமா தலைவர் நடராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஜவுளி பதனிடும் ஆலைகள் சுற்றுச்சூழலை காப்பதிலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றுவதிலும் முன் நிற்கின்றன.மாசற்ற கழிவுநீரை வெளியேற்றுதல், தண்ணீரை சேமிப்பதில் கவனமாக செயல்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல் திறன் தரவை பதிவு செய்யவும் ஆலோசித்தோம்.அதற்கேற்ப ஒரு தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்து, அதிகாரமளித்து கண்காணிப்பது என, முடிவு எட்டப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|