தென்னை நார் இருப்புக்கு கிராக்கி தென்னை நார் இருப்புக்கு கிராக்கி ... பிரத்யேக வண்ணத்தில் எண்ணெய் பாக்கெட்; உணவு பாதுகாப்பு துறை முடிவு பிரத்யேக வண்ணத்தில் எண்ணெய் பாக்கெட்; உணவு பாதுகாப்பு துறை முடிவு ...
பிரத்யேக வண்ணத்தில் எண்ணெய் பாக்கெட்; உணவு பாதுகாப்பு துறை முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
00:27

அவிநாசி : தீபம் எரிய பயன்­ப­டுத்­தும் எண்­ணெய் பாக்­கெட்­டு­க­ளுக்கு பிரத்­யேக வண்­ணம் ஒதுக்க, உணவு பாது­காப்பு துறை முடிவு செய்­துள்­ளது.

‘கடலை எண்­ணெய்’ என, அச்­சி­டப்­பட்­டுள்ள பாக்­கெட்­டில், சாதா­ரண பாமா­யில் எண்­ணெயை மட்­டும் அடைத்து விற்­பது, உணவு பாது­காப்­புத் துறை­யின் உரி­மத்தை புதுப்­பிக்­கா­மல், எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் மறு விற்­பனை செய்­வது போன்ற செயல்­க­ளி­லும், பலர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இதை தடுக்க, உணவு பாது­காப்­புத் துறை நிய­மன அலு­வ­லர்­களை உறுப்­பி­னர்­க­ளாக்கி, கண்­கா­ணிப்பு கமிட்டி அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதில், எடுக்­கப்­பட்­டுள்ள முடிவு குறித்து, உணவு பாது­காப்­புத் துறை வட்­டா­ரங்­கள் கூறி­ய­தா­வது:

வியா­பா­ரி­கள் பலர், தீப எண்­ணெயை, சமை­யல் எண்­ணெய் எனக்­கூறி விற்­கின்­ற­னர். பொது­மக்­களும் அதை நம்பி வாங்­கும் நிலை உள்­ளது. தீப எண்­ணெய், சமை­ய­லுக்கு ஏற்­ற­தல்ல.பொது­மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த, தீப எண்­ணெய் பாக்­கெட்­டு­களை ஊதா நிறத்­தில் அச்­சிட, அர­சுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, மொத்­த­மாக எண்­ணெயை வாங்கி, பாக்­கெட்­டு­களில் அடைத்து விற்­கும் தொழில் செய்­வோர், தாங்­கள் எண்­ணெய் வாங்­கும் நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, தடை­யில்லா சான்று பெற வேண்­டும்.

பாக்­கெட்­டில், நிறு­வனத்தின் முழு முக­வரி, எண்­ணெ­யில் கலந்­துள்ள பிற பொருட்­களின் விப­ரங்­களை அச்­சிட வேண்­டும். முக்­கி­ய­மாக, அந்த எண்­ணெய், ‘சமை­ய­லுக்கு உகந்­தது’ என்றோ, ‘சமை­ய­லுக்கு உகந்­த­தல்ல’ என்றோ, பெரிய எழுத்­து­களில் அச்­சிடப்பட வேண்­டும். இது­போன்ற முடி­வு­கள், கண்­கா­ணிப்பு கமிட்டி கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)