பதிவு செய்த நாள்
22 ஜூன்2018
00:12

புதுடில்லி : ஐ.பி.ஓ., எனப்படும் புதிய பங்கு வெளியீடுகள் குறித்த விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நேற்று டில்லியில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், அஜய் தியாகி தலைமையில், இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து, அஜய் தியாகி, செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதிய பங்கு வெளியீடுகளில், பங்கின் விலையை அறிவிப்பதற்கான கால அவகாசம், ஐந்தில் இருந்து மூன்று நாட்களாக குறைக்கப்படுகிறது. சந்தை கட்டமைப்பு நிறுவனங்களில், அன்னிய நிறுவனங்களின் பங்கு மூலதன வரம்பு, 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்குகளை திரும்பப் பெறுவது மற்றும் கையகப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்ய, கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கணக்கு தணிக்கை நிறுவனங்களின் விபரங்களை கட்டாயமாக தெரிவிக்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஏப்ரலில் அமலுக்கு வரும்.
அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒழுங்குமுறை விதிகளை சீர்படுத்துவதற்கும், இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|