விண்ணப்பம் ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி., தளம்‘ரீபண்ட்’ எதிர்பார்க்கும் வர்த்தகர்கள் தவிப்புவிண்ணப்பம் ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி., தளம்‘ரீபண்ட்’ எதிர்பார்க்கும் ... ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.88 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.88 ...
ஏராளமான கவர்ச்சி திட்டங்கள்: ரிலையன்ஸ் அதிரடிஅதிநவீன, ‘ஜியோகிகா பைபர்’ இணைய சேவை அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2018
01:32

மும்பை:ரிலை­யன்ஸ் குழு­மம், ‘ஜியோ­கிகா பைபர்’ என்ற அதி­ந­வீன தொழில்­நுட்­பத்­தி­லானஇணை­யச் சேவையை அறி­மு­கம் செய்­து உள்­ளது. அத்­து­டன், ‘ஆர்­ஜியோ’ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏரா­ள­மான கவர்ச்சி திட்­டங்­க­ளை­யும் அறி­வித்­துள்­ளது.

மும்­பை­யில் நேற்று, ரிலை­யன்ஸ் இண்­டஸ்­டி­ரீஸ் நிறு­வ­னத்­தின், 41வது ஆண்டு பொதுக் குழு கூட்­டம் நடை­பெற்­றது. இதில், ரிலை­யன்ஸ் குழும தலை­வர், முகேஷ் அம்­பானி பேசி­ய­வற்­றின் முக்­கிய அம்­சங்­கள்:

*ரிலை­யன்ஸ் நிகர லாபம், 2017 – 18ம் நிதி­யாண்­டில், 20.6 சத­வீ­தம் உயர்ந்து, 36,075 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளதுl 113 நாடு­க­ளுக்கு, 1.76 லட்­சம் கோடி ரூபாய்க்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. இது, நாட்­டின் மொத்த ஏற்­று­ம­தி­யில், 8.9 சத­வீ­தம்

*சுங்­கம் மற்­றும் கலால் வரி­யாக, 26,312 கோடி ரூபாய் செலுத்­தி­யுள்­ளோம். இது, இந்­தியா ஈட்­டிய இவ்­வகை வரி வரு­வா­யில், 6.4 சத­வீ­தம்l நிறு­வ­னம், 42,553 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., செலுத்தி, அதி­லும் சாதனை படைத்­து உள்­ளது
*தனி­யார் துறை­யில், அதிக வரு­மான வரி செலுத்­திய நிறு­வ­ன­மாக, ரிலை­யன்ஸ் உள்­ளது. 9,844 கோடி ரூபாய் வரி செலுத்­தப்­பட்­டுள்­ளதுl அதி­ந­வீன கம்­பி­வட தொழில்­நுட்­பத்­தில், ஜியோ­கிகா பைபர் இணை­யச் சேவை அறி­மு­க­மா­கிறது. இது, நாடு முழு­வ­தும் உள்ள இல்­லங்­க­ளின், 24 மணி நேர அவ­சர உத­வி­க­ளுக்கு புதிய வடி­வ­மைப்பை ஏற்­ப­டுத்­தும்

*இச்­சே­வை­யில், வாடிக்­கை­யா­ளர்­கள், மிகத் துல்­லி­ய­மான தரத்­தில், தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களை காண­லாம். ‘வீடியோ கான்­ப­ரன்ஸ்’ வசதி, குரல் வழி கட்­ட­ளை­யில் பணி­களை செய்­யும் மெய்­நி­கர் உத­வி­யா­ளர் சேவை ஆகி­ய­வற்­றை­யும் பெற­லாம். ‘ஸ்மார்ட் ஹோம்’ எனப்­படும், இல்­லத்­தில் உள்ள அனைத்து மின்­னணு சாத­னங்­க­ளின் தன்­னிச்சை தொடர்­புக்­கும், பயன்­பாட்­டிற்­கும் இச்­சேவை உத­வும்

*ஜியோ­கிகா பைபர் சேவை, லட்­சக்­க­ணக்­கான வீடு­களில் சோதனை அடிப்ப­டை­யில் நடை­பெற்று வரு­கிறது. விருப்­பம் உள்­ளோர், ‘மைஜியோ’ அல்­லது ‘ஜியோ டாட் காம்’ வலை­த­ளத்­தில் பதிவு செய்து கொள்­ள­லாம். வணிக ரீதி­யில், இச்­சே­வைக்­கான பதிவு, ஆக., 15ல் துவங்­கு­கிறதுl ஆர்­ஜியோ மொபைல் போனில், ‘பேஸ்­புக், யுடி­யூப்’ பயன்­பாட்டை அடுத்து, ‘வாட்ஸ் ஆப்’ வச­தி­யும் அறி­மு­க­மா­கிறது

*குறுக்கு திரை, விசைப்­ப­ல­கை­யு­டன், உயர் திற­னில் புதிய, ‘ஜியோ போன் – 2’ ஆக., 15ல் விற்­ப­னைக்கு வரு­கிறது. இதன் விலை, 2,999 ரூபாய்l ஜியோ போன் வாடிக்­கை­யா­ளர்­கள், தற்­போது பயன்­ப­டுத்­தும் ஜியோ போனை திரும்­பக் கொடுத்து, 501 ரூபாய்க்கு புதிய போனை வாங்­கிக் கொள்­ள­லாம்

*4,000 மெகா பிக்­சல்துல்­லி­யத்­தில், வீடியோ விளை­யாட்­டுக­ளுக்கு உத­வும், ‘ஜியோ­கிகா டிவி’ என்ற ‘செட்­டாப் பாக்ஸ்’ அறி­மு­க­மா­கிறது.

யாரும் செய்யாத சாதனைஆர்­ஜியோ, 22 மாதங்­களில், இரு மடங்­கிற்­கும் அதி­க­மா­னோரை இணைத்து, 21.50 கோடி சந்­தா­தா­ரர்­கள் கொண்ட நிறு­வ­ன­மாக உயர்ந்­துள்­ளது. உல­கில் வேறு எந்த தொழில்­நுட்ப நிறு­வ­ன­மும், குறு­கிய காலத்­தில் இத்­த­கைய சாத­னையை நிகழ்த்­தி­ய­தில்லை. ரிலை­யன்சை, தொழில்­நுட்ப அடித்­தள நிறு­வ­ன­மாக, உரு­மாற்­றிக் கொள்ள, ஆர்­ஜியோ உத­வி­யுள்­ளது.

ஜியோ மூலம், நாடு முழு­வ­தும் உள்ள குக்­கி­ரா­மங்­கள், பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள் ஆகி­ய­வற்­றுக்கு, இணைய சேவை கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கில் செயல்­பட்டு வரு­கி­றோம்.– முகேஷ் அம்­பானி, தலை­வர், ரிலை­யன்ஸ் குழு­மம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)