பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
15:31

புதுடில்லி : கால தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் அபராதம்செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரிச் சட்டம் 44 ஏ.பி.யின கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2017 - 18-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். மாத ஊதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெற்வோர் இந்தப் பிரிவில் வருகின்றனர்.
மொத்த வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளவர்கள் ஜூலை 31க்குப் பிறகு டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்தால் ரூ.1000 அபரதம் என்றும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5000 அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருமானம் 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 2018 டிசம்பர் 31க்கு மேல் 2019 மார்ச் 31க்குள் தாக்கல் செய்தால் அபராதம் 10 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|