பதிவு செய்த நாள்
20 ஜூலை2018
23:37

புதுடில்லி : ‘‘துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஓராண்டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்,’’ என, வேதாந்தா குழும தலைவர், அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டித்து, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், ௧3 பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், அனில் அகர்வால், தனியார், ‘டிவி’க்கு அளித்த பேட்டி: வேதாந்தா குழும நிறுவனங்களின் விற்றுமுதலில், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பங்கு, 2 சதவீதமாகும். ஆலை, ஓராண்டு மூடப்பட்டால், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இப்பிரச்னைக்கு நல்ல தீர்வு வரும் என, நம்புகிறேன். எத்தகைய முடிவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில், குழுமத்தின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது. இதை, 50 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வேதாந்தா குழுமம், கச்சா எண்ணெய், சுரங்கம், உலோகம், தாது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|