பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
00:59

புதுடில்லி: ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெறும் நோக்கில், மீண்டும், ‘டூட்டி டிரா பேக்’ திட்டம் அமலுக்கு வர உள்ளது.இந்த திட்டத்தில், இறக்குமதி பொருட்களுக்கு செலுத்தும் வரியை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்யும் போது, திரும்பப் பெறலாம்.ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால், கைவினைப் பொருட்கள், ஜவுளி, தோல் பொருட்கள் உட்பட, அதிக அளவில் தொழிலாளர்களின் பங்களிப்பை கொண்ட சிறிய, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.இதையடுத்து, இத்திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஜி.கே.பிள்ளை தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை, விரைவில் மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது.‘‘இதைத் தொடர்ந்து, அக்., 1 முதல், மீண்டும் டூட்டி டிரா பேக் திட்டம் அமலாகும்.‘‘மேலும், ஏற்றுமதியாளர்களின் நிதித் தேவைகளை சமாளிக்க உதவும், ‘இ – வாலட்’ திட்டமும் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’’ என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர், கணேஷ் குமார் குப்தா தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|