ஆந்திராவுக்கு மாறும் பி.சி.பி.எல்., ‘ஸ்டெர்லைட்’ கதியால் அச்சம்ஆந்திராவுக்கு மாறும் பி.சி.பி.எல்., ‘ஸ்டெர்லைட்’ கதியால் அச்சம் ... பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை: ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் கருத்து கணிப்பு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை: ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் கருத்து ... ...
சிமென்ட், ‘ஏசி, டிவி’க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
23:50

புதுடில்லி : ‘‘சிமென்ட், ‘ஏசி, டிவி’ உள்­ளிட்ட பொருட்­க­ளுக்கு தற்­போது உள்ள, 28 சத­வீத, ஜி.எஸ்.டி., குறைக்­கப்­படும்,’’ என, மத்­திய அமைச்­சர் அருண் ஜெட்லி தெரி­வித்­து உள்­ளார்.

வரி குறைப்பு:
இது குறித்து, தன் வலை­த­ளத்­தில், அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது: புதிய வரி விதிப்­பான, ஜி.எஸ்.டி., 2017, ஜூலை, 1ல் அறி­மு­க­மான போது, 28 சத­வீத வரி­யில் இடம் பெற இருந்த பொருட்­களில், 31 சத­வீத பொருட்­க­ளின் வரி, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது. அடுத்த நான்­கரை மாதங்­களில், அதா­வது, நவ., 10ல், மேலும், 177 பொருட்­க­ளுக்கு, வரி குறைக்­கப்­பட்­டது. நடப்பு ஜூலை, 21ல், மேலும், 15 பொருட்­க­ளின் வரி குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஜி.எஸ்.டி., அறி­மு­க­மான, 13 மாதங்­களில், 28 சத­வீத வரிப் பிரி­வில் இருந்து, பெரும்­பான்மை பொருட்­கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. இது, ஒரு சாத­னை­யா­கும். இன்று, 28 சத­வீத வரிப் பிரி­வையே நீக்­கும் முயற்சி நடக்­கிறது. இப்­பி­ரி­வில் தற்­போது, சில ஆடம்­பர சாத­னங்­களும், உடல் நலன் சாரா பொருட்­களும் தான் உள்­ளன. இவற்­றி­லும், சிமென்ட், ‘ஏசி, டிவி’ உள்­ளிட்ட பொருட்­க­ளின் வரி, விரை­வில் குறை­யும். இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முற்றிலும் நீக்கம் :
கடந்த வாரம், மத்­திய நிதி­ய­மைச்­சர் பொறுப்­பில் உள்ள, பியுஷ் கோயல் தலை­மை­யில், ஜி.எஸ்.டி., கூட்­டம் நடை­பெற்­றது. இதில், 100க்கும் மேற்­பட்ட பொருட்­க­ளின் வரி குறைக்­கப்­பட்­டது. ‘சானிட்­டரி நாப்­கின்’ களுக்கு, 12 சத­வீத, ஜி.எஸ்.டி., முற்­றி­லும் நீக்­கப்­பட்­டது. மேலும், ரெப்­ரி­ஜி­ரேட்­டர், வாஷிங் மிஷின், வாட்­டர் ஹீட்­டர், பெயின்ட், வார்­னிஷ், சிறிய, ‘டிவி’ உள்­ளிட்­ட­வற்­றின் வரி, 28 சத­வீ­தத்­தில் இருந்து, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது. குறைக்­கப்­பட்ட புதிய வரி விகி­தம், நேற்று அம­லுக்கு வந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)