உற்­பத்தி துறை­யில் அதிக வேலை­வாய்ப்புஉற்­பத்தி துறை­யில் அதிக வேலை­வாய்ப்பு ... துருக்கி பிரச்னையால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு துருக்கி பிரச்னையால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ...
பங்குச்சந்தை மின் வணிகத்துக்கு கட்டுப்பாடா, கடிவாளமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2018
00:19

இந்­தி­யா­வில் மின் வணி­கத்தை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான கொள்கை முன்­வ­ரைவை, மத்­திய அரசு சமீ­பத்­தில் வெளி­யிட்­டுள்­ளது. வளர்ந்­து ­வ­ரும் மின் வணி­கத் துறை­யின் சவால்­களை எதிர்­கொள்ள, இத்­த­கைய ஒரு முயற்சி தேவை என்­பது பல ஆண்­டு கோரிக்கை. ஆனால், இந்­தக் கொள்கை முன்­வ­ரைவு வர­வேற்­பை­விட விமர்­ச­னங்­க­ளையே அதி­கம் பெற்­றுள்­ளது, ஏன்?

இன்­றைக்கு எத்­தனை பேர் கடை­க­ளுக்­குப் போய் ஆடை­கள் வாங்­கு­கி­றீர்­கள்? மின்­னணு சாத­னங்­களை வாங்­கு­கி­றீர்­கள்? ஓட்­டல்­க­ளுக்­குப் போகி­றீர்­கள்? எல்­லாமே கைய­டக்க செல்­போ­னிலோ, மடிக்­க­ணி­னி­யிலோ செய்­து­கொள்­கி­றீர்­கள் தானே? அது­வும், நினைத்தே பார்க்க முடி­யாத தள்­ளு­படி விலை­யில்.எந்த மின் வணிக நிறு­வ­னம் ‘ஆபர்’ போடு­கிறது என்று காத்­தி­ருந்து தெரிந்­து­கொண்டு, மளிகை சாமான்­கள் உட்­பட, எல்­லா­வற்­றை­யும் இணை­யத்­தின் வழி­யா­கவே வாங்­கும் பழக்­கம், பெரு­ந­க­ரங்­களில் மட்­டு­மல்ல, சிறு நக­ரங்­க­ளி­லும் பெரு­கிக்­கொண்­டு ­இருக்­கிறது.

இத­னால் தான், வேறு எந்­தத் துறை­யும் காணாத வளர்ச்­சியை, மின் வர்த்­த­கத் துறை பெற்­றுள்­ளது. 2017ல் இந்­திய மின் வணி­கத் துறை­யின் மூலம் நடந்த விற்­பனை, 1.38 லட்­சம் கோடி ரூபாய். ஆனால், இங்கே மின் வணி­கத்­துக்கு இருக்­கும் வாய்ப்பு, 3.5 லட்­சம் கோடி ரூபாய் என, சமீ­பத்­திய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

அமெ­ரிக்கா

அமெ­ரிக்­கா­வை­யும், சீனா­வை­யும் ஒப்­பி­டும்­போது, நம்­மு­டைய விற்­பனை மிக மிகச் சொற்­பம். அந்த விற்­ப­னையி­லும், முன்­ன­ணி­யில் இருப்­பவை, மின்­னணு சாத­னங்­களும் – 49 சத­வீ­தம், ஆடை­க­ளும்தான் – 29 சத­வீ­தம். ஆனால், வளர்ந்து வரும் இணைய பயன்­பாடு, மொபைல் சேவை­கள் ஆகி­ய­வற்­றால், மின் வணி­கம் பன்­ம­டங்கு அதி­க­ரிக்­கப் போவது உறுதி.தற்­போது, இந்­தி­யா­வில் உள்ள, 39 கோடி இணைய பய­னர்­களில், சுமார், 40 சத­வீ­தம் பேர்­தான், அதா­வது, 16 கோடி பேர் தான் மின் வ­ணிக வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இதி­லும், 90 சத­வீ­தம் பேர், அதா­வது, 14 கோடி பேர் வச­தி­யான பின்­ன­ணி­யைக் கொண்­ட­வர்­கள்.

இந்­தத் தக­வல்­கள், ஒரு செய்­தியை உரக்­கச் சொல்­கிறது. இங்கே மின் வணி­கம் வளர்­வ­தற்­கான வாய்ப்பு மிக­மிக அதி­கம். அப்­ப­டி­யா­னால், அடுத்த கேள்­வி­கள் எழு­வது சக­ஜம் தானே?எல்­லா­வற்­றை­யும் இணை­யத்­தி­லேயே வாங்­கி­விட்­டால், வழக்­க­மான கடை­க­ளின் கதி என்ன? அது­வும் நினைத்­துப் பார்க்க முடி­யாத தள்­ளு­ப­டியை வழங்கி, வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்­கும்­போது, போட்­டி­யில் ஏற்­றத்­தாழ்வு ஏற்­பட்­டு­வி­டு­கி­றதே. சம­மான போட்டி இல்­லாத சூழல் உரு­வா­கி­வி­டு­கி­றதே.

இந்த வாய்ப்­பைப் பயன்­படுத்­தித் தான், அமே­சா­னும், வால்­மார்­டும் இந்­தி­யச் சந்­தைக்­குள் நுழைய முயற்சி செய்­கின்­றன. அவற்­றோடு சாதா­ரண கடை­க­ளால் எப்­ப­டிப் போட்டி போட முடி­யும்?

மேலும், இணை­யத்­தி­லும் எண்­ணற்ற பிரச்­னை­கள். குறிப்­பாக வாடிக்­கை­யா­ளர்­கள் ஏமாற்­றப்­ப­டு­வது முக்­கி­ய­மா­னது. அவர்­கள் எங்கே போய் புகார் அளிப்­பது? அதற்­கான தீர்­வு­மு­றை­கள் என்­னென்ன? வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பற்றி திரட்­டப்­படும் தக­வல்­கள் எங்கே சேமிக்­கப்­ப­டு­கின்­றன? அவற்­றின் பாது­காப்­புக்கு யார் உறுதி அளிப்­பது?

ஒரு துறை வள­ரும் வேகத்­தில், கூடவே பிரச்­னை­களும், சிக்­கல்­களும் அதை­விட வேக­மாக வளர்ந்­து­வ­ரு­கின்­றன. இதை­யெல்­லாம் கருத்­தில் கொண்­டு­தான், இந்­திய மின் வணி­கத்­துக்­கென ஒரு கொள்­கையை உரு­வாக்­க­ வேண்­டும் என, கோரப்­பட்­டது. அதன்படி, பொருட்­கள் மீதான ‘அதி­ரடி, அபார’ தள்­ளு­படி விளை­யாட்டை, அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் மின் வணிக நிறு­வ­னங்­கள் படிப்­ப­டி­யாக நிறுத்­தி­விட வேண்­டும்.

காப்­பீடு, ஓய்­வூ­தி­யம், பங்­குச் சந்தை, தொலைத்­தொ­டர்பு ஆகிய துறை­களை நெறிப்ப­டுத்த, சுயேச்­சை­யான ஆணை­யங்­கள் செயல்­ப­டு­வது போல், மின் வணி­கத்­துக்­கும் ஒரு தனி ஆணை­யம் ஏற்­ப­டுத்­தப்­படும். இந்த ஆணை­யம், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் புகார்­க­ளைக் கையா­ளு­வது உட்­பட, பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளை­யும், சீர்­தி­ருத்­தங்­க­ளை­யும் மேற்­கொள்­ளும்.பல்­வேறு மின் வணிக நிறு­வ­னங்­கள் இணைந்து, புதிய நிறு­வ­னங்­கள் உரு­வா­வதை ஒழுங்­கு­ப­டுத்த, இந்­திய சந்­தைப் போட்டி கட்­டுப்­பாட்டு ஆணை­யம், சட்­டத்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்­ளும்.

எல்­லா­வற்­றுக்­கும் மேல், இந்­தி­யா­வில் செய்­யப்­படும் விற்­ப­னை­கள், திரட்­டப்­படும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விப­ரங்­கள் ஆகி­ய­வற்றை மின் ­வ­ணிக நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வுக்­குள் வைத்­துக்­கொள்ள வேண்­டும். தேசப் பாது­காப்பு கரு­தி­யும், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் சேவை­களை மேம்­ப­டுத்­த­வும், இத்­த­கைய தக­வல் சேமிப்பு இந்­தி­யா­வுக்­குள் இருக்­க­வேண்­டும் என, வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

விமர்சனங்கள்கொள்கை குறிப்பு

விப­ரங்­கள் வெளி­யா­ன­வு­ட­னேயே, ஒரே விவா­தங்­கள். அர­சாங்­கம் தேவை­யில்­லா­மல் தலையை நுழைக்­கிறது என, கூப்­பாடு. இன்­னொரு, ‘லைசென்ஸ் ராஜ்’ காலம் ஏற்­பட்­டு­வி­டுமோ என, அச்­சம். எந்­த­வி­த­மான கட்­டுப்­பா­டு­களும் இல்­லா­த­தால் தான், மின் ­வ­ணி­கம் இவ்­வ­ளவு விரை­வாக வளர்­கிறது. இதை அப்­ப­டியே அனு­ம­திக்­க­வேண்­டுமே அன்றி, கட்­டுப்­பா­டு­கள் விதிப்­பது, முட்­டுக்­கட்­டை­யா­கவே முடி­யும் என்ற கருத்­தும் முன்­வைக்­கப்­ப­டு­கிறது. இத­னால் ஏற்­பட்­டி­ருக்­கும்

வேலை­வாய்ப்­பு­களும், தொழில்­முன்­னேற்­ற­மும் பாதிக்­கப்­படும் என்ற மிரட்­ட­லும் கூடவே சொல்­லப்­ப­டு­கிறது.இன்­னொரு விஷ­யம், இணைய வணி­கம் என்­பது, ‘தள்­ளு­படி’ விலை­யில்­தான் கொடி­கட்­டிப் பறக்­கிறது. இந்­தக் கொள்கை முன்­வ­ரைவு, அதற்­குத்­தான், ‘ஆப்பு’ வைக்­கிறது.

அடுத்த இரண்டு ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக, ‘தள்­ளு­ப­டி­கள்’ தள்­ளு­படி செய்­யப்­பட வேண்­டும் என்­றால், இணைய வணி­கமே படுத்­து­வி­டாதா... என்ற அச்­சத்தை மின் வணிக நிறு­வ­னங்­கள் தெரி­விக்­கின்­றன.பெரிய மின்­ வ­ணிக நிறு­வ­னங்­கள், இப்­ப­டிப்­பட்ட கொள்­கையை அர­சாங்­கம் எடுத்­து­வி­டா­மல் தடுக்க, பல முயற்­சி­களில் இறங்­கு­வ­தா­க­வும் செய்­தி­கள் வரு­கின்­றன.இன்­னொ­ரு­பு­றம், மின்­ வ­ணி­கத்­தால் சாதா­ரண சில்­லறை வணி­கர்­கள் பாதிக்­கப்­பட்­டு உள்­ள­னர். அவர்­க­ளால் போட்டி போட முடி­ய­வில்லை.

அதற்கு வஞ்­சம் தீர்க்­கும்­வி­த­மா­கத்­தான், மின் வணிக நிறு­வ­னங்­க­ளுக்கு, அர­சாங்­கத்­தின் மூலம், கடி­வா­ளம் போடப் பார்க்­கின்­ற­னர் என்ற குற்­றச்­சாட்­டும் எழுந்­துள்­ளது.ஒரு புதிய துறை ஆரம்­பிக்­கும்­போது, குழப்­ப­மா­கவே இருக்­கும். வணி­கம் பெரு­க­வும், பய­னர்­கள் அதி­க­ரிக்­க­வும் ஆரம்­பிக்­கும்­போது, அதை நெறிப்­ப­டுத்தி, ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான தேவை தன்­னிச்­சை­யா­கவே எழும்.

மின் வணி­கத் துறை­யும் இதற்கு விலக்­கல்ல. தள்­ளு­ப­டி­க­ளுக்கு ஆசைப்­பட்டு, இணை­யத் திருட்­டு­க­ளி­லும், சுரண்­ட­லி­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் சிக்­கிக்­கொள்­ளக்­கூ­டாது. அதே­போல், அவர்­க­ளு­டைய புகார்­க­ளுக்கு, உரிய தீர்­வும் காணப்­பட வேண்­டும். அதற்கு வலு­சேர்க்­கும் அமைப்­பும், நெறி­மு­றை­களும் உரு­வா­வ­தும் வர­வேற்­கத்­தக்­கதே. மேலும், மின் ­வ­ணிக வரைவு கொள்­கை­யில் நில­வும் மாறு­பட்ட கருத்­து­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கில், அதை மறு­ப­ரி­சீ­லனை செய்ய, மத்­திய அரசு முடிவு செய்­தி­ருப்­ப­தும், பாராட்­டத்­தக்­கதே.
– ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான ... மேலும்
business news
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது ... மேலும்
business news
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ ... மேலும்
business news
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)