பதிவு செய்த நாள்
16 ஆக2018
11:01

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 70.32 என்ற நிலையை எட்டி உள்ளது.
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளது. இதனால் துருக்கி நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் வர்த்தக நேர முடிவில் 69.89 ஆக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது.
இந்நிலையில் நேற்று விடுமுறைக்கு பிறகு இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூபாய் மதிப்பு மீண்டும் 70.25 என்ற நிலையை அடைந்தது. காலை 10.15 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 43 காசுகள் வரை சரிந்து 70.32 ஆனது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|