பதிவு செய்த நாள்
16 ஆக2018
11:34

மும்பை : நேற்றைய விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ் 207 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. உலோகம், கட்டுமானம், பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கித்துறை பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதாலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைந்ததாலும் நிப்டி 11,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,16, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 207.03 புள்ளிகள் சரிந்து 37,644.97 புள்ளிகளாகவும், நிப்டி 58.15 புள்ளிகள் சரிந்து 11,376.95 புள்ளிகளாகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களின் வரவு குறைந்ததே பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|