பதிவு செய்த நாள்
21 ஆக2018
01:57
ஐதராபாத்: ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இரண்டு நாள் விடுப்பில் செல்லும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.கடந்த, 2012க்கு பின், ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்தோருக்கு, கூடுதல் சேம நல நிதி, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக, ஐதராபாத், ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் நடைபெற்ற அமைதி போராட்டத்தில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஐக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து, இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:ஓய்வூதிய பிரச்னைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, நீண்ட காலம் காத்திருந்தோம்; பயனில்லை. பொறுமை இழந்து, போராட முடிவு செய்துள்ளோம். வரும், செப்., 4, 5ம் தேதிகளில், கூட்டமைப்பைச் சேர்ந்தோர் அனைவரும் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான அறிவிக்கை, அனைத்து பிராந்திய மண்டலங்களுக்கும் அனுப்பப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|