பதிவு செய்த நாள்
21 ஆக2018
01:58

புதுடில்லி: ‘இந்தியாவில், ஊதிய சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவின் ஊதிய நிலவரம் குறித்து, இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 20 ஆண்டுகளாக, இந்திய பொருளாதாரத்தின் ஆண்டு சராசரி வளர்ச்சி, 7 சதவீதமாக உள்ளது. ஆனால், குறைந்த ஊதியம், குறிப்பாக, பெண்களிடம் ஊதிய வேறுபாடு அதிக அளவி ல் காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி காரணமாக, இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது. வேலைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சேவைகள் மற்றும் தயாரிப்பு துறைகளில், தொழிலாளர்கள் பங்களிப்பு உயர்ந்துள்ளது.வேளாண் துறையில், 47 சதவீதம் பேர் பணிபுரிகின்றனர்.நாட்டின் மொத்த பணியாளர்களில், 51 சதவீதம் பேர், சுயதொழில் பிரிவினர். தினக்கூலிகள், 62 சதவீதம் பேர் உள்ளனர்.அமைப்பு சார்ந்த துறையில் ஊழியர்கள் அதிகரித்துள்ள போதிலும், இத்துறையிலும், தினக்கூலிகள் உள்ளனர். கடந்த, 2004 -– 05ம் ஆண்டு முதல், ஊதிய வேறுபாடு ஓரளவு குறைந்துள்ள போதிலும் அது இன்னும் உயர்வாகவே உள்ளது.தினக்கூலிகள் ஊதியம் உயர்த்தப்பட்டதால், 1993 – -94 முதல், 2011 -– 12 வரை ஊதியத்தில் காணப்படும் பாரபட்சம்குறைந்துள்ளது.
பாலின பாகுபாடு : இதே காலத்தில், நிரந்தர ஊழியர்களிடம் காணப்பட்ட ஊதிய வேறுபாட்டில், ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது.ஊதியத்தில், பாலின பாகுபாடு, 48 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்த போதிலும், சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, ஊதிய வேறுபாடு அதிகமாக உள்ளது.இது, கிராமம், நகரம், சாதாரண மற்றும் தினக் கூலி என, அனைத்திலும் காணப்படுகிறது.கிராமப்புறங்களில் தினக் கூலிகளாக வேலை செய்யும் பெண்கள் தான், மிகக் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். அது, நகர்ப்புறத்தில் ஆண்கள் பெறும் ஊதியத்தில், 22 சதவீதமாக உள்ளது.அனைத்து பணியாளர்களுக்கும், சர்வதேச அளவிற்கு நிகரான ஊதியம் வழங்குவதில் சவால்கள் உள்ளன. மாநில அரசுகள், ஒருசில பிரிவுகளில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கின்றன. இது, நாடு முழுவதும், 1,709 மாறுபட்ட ஊதிய விகிதங்களுக்கு வித்திட்டுள்ளது.கடந்த, 1948ல், குறைந்தபட்ச ஊதிய விகித சட்டத்தை முதன் முதலாக அமல்படுத்திய நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இந்தியா, ஊதிய மாறுபாடுகளை களைந்து, சீர்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறைவாக உள்ளதுகடந்த,1990களில், தேசிய அளவில், குறைந்தபட்ச ஊதிய திட்டம் அமலானது. இதன்படி, தின ஊதியம் உயர்த்தப்பட்டு, 2017ல், 176 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கும் குறைவாக, 6.20 கோடி பேர் ஊதியம் பெறுகின்றனர். அதிலும் பெண்களின் ஊதியம் குறைவாக உள்ளது.ஐ.எல்.ஓ.,
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|