‘பொது துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அவசியம்’‘பொது துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அவசியம்’ ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு ...
தனியார் நிறுவனமாக டாடா சன்ஸ் மாறுவதை தடை செய்ய முடியாது; சைரஸ் மிஸ்திரி மனு மீது என்.சி.எல்.ஏ.டி., அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
23:27

புதுடில்லி : ‘டாடா சன்ஸ், தனி­யார் நிறு­வ­ன­மாக மாற்­றப்­ப­டு­வதை தடை செய்ய முடி­யாது’ என, என்.சி.எல்.ஏ.டி., எனப்­படும், தேசிய நிறு­வன சட்ட மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யம் தெரி­வித்­துள்­ளது.

டாடா சன்ஸ் நிறு­வனதலை­வர், ரத்­தன் டாடா, 2012ல், ஓய்வு பெற்று, கவு­ரவ தலை­வ­ரா­னார். இதை­ய­டுத்து, அதே ஆண்டு, டிசம்­ப­ரில், டாடா சன்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக, சைரஸ் மிஸ்­திரி பொறுப்­பேற்­றார். அவ­ரது, நான்கு ஆண்டு செயல்­பா­டு­களில், ரத்­தன் டாடா அதி­ருப்தி அடைந்­தார். இதை­ய­டுத்து, டாடா சன்ஸ் இயக்­கு­னர் குழு ஒப்­பு­த­லு­டன், சைரஸ் மிஸ்­திரி, 2016, அக்., 24ல் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

இதை எதிர்த்து, சைரஸ் மிஸ்­திரி தாக்­கல் செய்த மனுவை, தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யம் தள்­ளு­படி செய்­தது. இதை தொடர்ந்து, சைரஸ் மிஸ்­திரி, என்.சி.எல்.ஏ.டி.,யில் மேல்­மு­றை­யீடு செய்­து உள்­ளார்.

தலையீடு :
இந்­நி­லை­யில், 2017, செப்., 21ல், டாடா சன்ஸ் நிறு­வ­னத்­தின் பொதுக்­குழு கூட்­டம் நடை­பெற்­றது. அதில், டாடா சன்ஸ் நிறு­வ­னத்தை, நிகர்­நிலை பொது நிறு­வ­னம் என்ற அந்­தஸ்­தில் இருந்து, தனி­யார் நிறு­வ­ன­மாக மாற்­றும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. நிகர் நிலை பொது நிறு­வன பங்­கு­களை வெளிச் சந்­தை­யில் விற்­க­லாம். ஆனால், தனி­யார் நிறு­வ­னப் பங்­கு­களை, அவ்­வாறு விற்க முடி­யாது. அந்­நி­று­வ­னத்­தின் இதர பங்­கு­தா­ரர்­க­ளுக்கு மட்­டுமே விற்க முடி­யும்.

சைரஸ் மிஸ்­தி­ரி­யின், ஷபூர்ஜி பலோன்ஜி குடும்­பம் வசம், டாடா சன்ஸ் நிறு­வ­னத்­தின், 18.4 சத­வீத பங்­கு­கள் உள்­ளன. அவற்றை முழு­வ­து­மாக வாங்கி, டாடா குழு­மத்­தில், சைரஸ் மிஸ்­தி­ரி­யின் தலை­யீட்டை அடி­யோடு முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கா­கவே, டாடா சன்ஸ், தனி­யார் நிறு­வ­ன­மாக மாற்ற நட­வ­டிக்கை எடுத்­தது.

மறுப்பு :
இந்­நி­லை­யில், 6ம் தேதி, டாடா சன்ஸ், தனி­யார் நிறு­வ­ன­மாக மாற, தேசிய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கம் ஒப்­பு­தல் வழங்­கி­யது. இதை எதிர்த்து, ‘தனி­யார் நிறு­வ­ன­மாக டாடா சன்ஸ் மாறு­வ­தற்கு, இடைக்­கால தடை விதிக்க வேண்­டும்’ என, சைரஸ் மிஸ்­திரி சார்­பில், என்.சி.எல்.ஏ.டி.,யில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த மனுவை விசா­ரித்த, தலைமை நீதி­பதி, எஸ்.ஜே.முகோ­பாத்யா தலை­மை­யி­லான அமர்வு, டாடா சன்ஸ், தனி­யார் நிறு­வ­ன­மாக மாறு­வ­தற்கு, தடை விதிக்க முடி­யாது என, மறுத்து விட்­டது. அதே­ச­ம­யம், ‘சைரஸ் மிஸ்­தி­ரி­யி­டம், பங்­கு­களை விற்­கு­ம்படி கட்­டா­யப்­ப­டுத்­தக் கூடாது’ என, டாடா சன்ஸ் நிறு­வ­னத்­திற்கு உத்­த­ர­விட்ட நீதி­ப­தி­கள், இது தொடர்­பாக, 10 நாட்­க­ளுக்­குள் பதில் அளிக்­கு­ம்படி கூறி, விசா­ர­ணையை, செப்.,24க்கு தள்ளி வைத்­த­னர்.

ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் :
சைரஸ் மிஸ்­திரி தலை­மை­யி­லான, ஷபூர்ஜி பலோன்ஜி குழு­மம், ஆண்­டுக்கு, 28 ஆயி­ரம் கோடி ரூபாய் விற்­று­மு­த­லு­டன், ரியல் எஸ்­டேட், கட்­டு­மா­னம், ஜவுளி, பொறி­யி­யல் உட்­பட, பல்­வேறு துறை­களில் ஈடு­பட்­டுள்­ளது. சைரஸ் மிஸ்­திரி குடும்­பத்­தி­னர், டாடா சன்ஸ் நிறு­வ­னத்­தின், 90 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள பங்­கு­களை வைத்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)