பதிவு செய்த நாள்
01 செப்2018
05:13

புதுடில்லி : கடந்த ஜூலையில், வரி வருவாய் உயர்வால், மத்திய அரசின் நிதியாதாரம் அதிகரித்துள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில், 86.5 சதவீதமாக கட்டுக்குள் வந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு, ஜூலையில், 92.4 சதவீதமாக உயர்ந்து இருந்தது. ஜூலை இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிகர வரி வருவாய், 2.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டில், 19.8 சதவீதமாகும். நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறைக்கு, 6.24 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நிதிப் பற்றாக்குறை, 5.40 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. இதே காலத்தில், மத்திய அரசின் மொத்த வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டில், 19.2 சதவீதமாக, 3.49 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 19 சதவீதமாக குறைந்து இருந்தது.
மொத்த செலவினம், பட்ஜெட் மதிப்பீட்டில், 36.4 சதவீதமாக, 8.89 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் காணப்பட்டதை விட அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|