பதிவு செய்த நாள்
10 செப்2018
01:28

பொது
வருங்கால வைப்பு நிதியான, பி.பி.எப்., அறிமுகமாகி, 50 ஆண்டுகள்
ஆகிறது. 1968ம் ஆண்டு அறிமுகமான இந்த திட்டம், அதிக ரிஸ்கை முதலீட்டாளர்கள்
பரவலாக நாடும் திட்டமாக இருக்கிறது. மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட
முதலீட்டு வாய்ப்புகள் மத்தியிலும் ஈர்ப்புடையதாக தொடரும்,
பி.பி.எப்., திட்டம் தொடர்பாக அதிகம் அறிப்படாத அம்சங்கள்:
நீட்டிப்பு வசதி
பி.பி.எப்.,
நீண்ட கால திட்டமாகும். 15 ஆண்டுகளில் இது முடிவடையும். 15
ஆண்டில் முதிர்வடையும் போது, இதில் சேர்ந்துள்ள தொகையை, அதற்கான
வட்டியுடன் மொத்தமாக விலக்கி கொள்ளலாம் அல்லது திட்டத்தை மேலும்
நீட்டித்துக்கொள்ளலாம். புதிய டிபாசிட்கள் செய்து அல்லது செய்யாமலேயே திட்டத்தை, 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
பகுதி விலக்கல் வசதி
இந்த திட்டத்தில் பகுதி விலக்கல் வசதி உண்டு. அவசர தேவை அடிப்படையில், திட்டத்தில் இணைந்த, ௭ ஆண்டுக்கு பின் பகுதி விலக்கல் சாத்தியம். முந்தைய ஆண்டில்
உள்ள தொகையில், 50 சதவீதம் அல்லது, விலக்கி கொள்ளும் ஆண்டுக்கு
முந்தைய நான்காம் ஆண்டு இறுதி தொகையில், 50 சதவீதம் விலக்கி
கொள்ளலாம்.
வெளியேற்றம்
15 ஆண்டு, ‘லாக் இன்’ காலம் உடையது என்றாலும், குறிப்பிட்ட சூழல்களில் பாதியில் வெளியேறலாம். எனினும், ஐந்து நிதியாண்டுகள் முடிந்த பிறகே இது சாத்தியம். உயிருக்கு அச்சுறுத்தலான நோய், உயர் கல்வி தேவை ஆகிய காரணங்களுக்காக விலக்கி கொள்ளலாம். இதற்கான முறையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
கடன் வசதி
மூன்றாம் ஆண்டு முதல், பி.பி.எப்., கணக்கு மீது, உறுப்பினர் கடன் பெறலாம். கடன் பெறுவதற்கு முந்தைய இரண்டாம் ஆண்டின் இறுதியில், கணக்கில் உள்ள தொகையில், 25 சதவீதம் கடனாக பெறலாம். எனினும், ஏழாம் ஆண்டுக்கு பிறகு, பகுதி விலக்கல் செய்யலாம் என்பதால், அதன் பிறகு கடன் வசதி கிடையாது.
கணக்கு மாற்றம்
பி.பி.எப்., கணக்கை அஞ்சலகம் அல்லது இந்த திட்டத்தை வழங்கும் வங்கிகளில் துவக்கலாம். பணிமாற்றம் அல்லது இடமாற்றம் காரணமாக பி.பி.எப்., கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. வங்கி அல்லது அஞ்சலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|