பதிவு செய்த நாள்
10 செப்2018
01:25

காப்பீட்டின்
அவசியத்தை உணர்ந்திருப்பதோடு, காப்பீடு திட்டங்களை தொடர்ந்து
பராமரிப்பதும் அவசியம். உரிய காலத்தில் பிரீமியம்
செலுத்தாவிட்டால் பாலிசி காலாவதியாகும் அபாயம் உள்ளது.
அண்மையில்,
காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்படி, புதிய
பாலிசிகளில், 25 சதவீத பாலிசிகள் முதலாண்டுக்குப்பின்
தொடரப்படுவதில்லை என, தெரிவிக்கிறது. குறைந்த பிரீமியம் பாலிசிகளில் இது அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.பாலிசி காலாவதியாக அனுமதிப்பதால், காப்பீடு பெற்றவர்களுக்கு தான் முழு இழப்பு. பொதுவாக, குறித்த காலத்தில் பிரீமியம் செலுத்த தவறி, அதன் பிறகு வழங்கப்படும் சலுகை காலத்திலும் இதை
செய்யவில்லை எனில், பாலிசி காலாவதியாகும்.
இதனால், ‘டெர்ம் பாலிசி’ எனில் முழு பலனையும் இழக்க நேரிடும். ‘யூலிப்’ திட்டம் எனில், ‘லாக் இன்’ காலத்தில் பிரீமியம் செலுத்த தவறினால், அதுவரை சேர்ந்த தொகையை கூட
பெற முடியாது. 5 ஆண்டுகளுக்கு பிறகு எனில், பாலிசியை ஒப்படைத்து, அதில் சேர்ந்து உள்ள தொகையை பெறலாம்.
வழக்கமான
திட்டங்கள் எனில், ஆரம்ப காலங்களில் காலாவதியானால் அனைத்து
பலன்களையும் இழக்க நேரிடலாம். சரண்டர் மதிப்பு ஏற்பட்டுஇருந்தால் அதை பெறலாம்.காப்பீடு முக்கியமான பாதுகாப்பு என்பதால், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து, தொடர்வதே ஏற்றது. பிரீமியம்
தொகை மற்றும் அபராதம் செலுத்தி பாலிசியை புதுப்பிக்க இரண்டு ஆண்டு கால
அவகாசம் அளிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாலிசியை
கைவிடுவதால் காப்பீடு பாதுகாப்பை இழப்பதோடு, புதிய பாலிசி
பெறுவதாக இருந்தால், அதற்கான செலவு அதிகமாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|